விஜய் டிவி ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் – ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி 'காமெடி ராஜா கலக்கல் ராணி' அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி 'காமெடி ராஜா கலக்கல் ராணி' அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் - ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ அறந்தாங்கி நிஷாவின் புதிய கெட்டப் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர் அறந்தாங்கி நிஷா, தற்போது நடிகர் வடிவேலுவின் பிரபல கெட்டப்பில் ஒன்றில் தோற்றமளித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வடிவேலு கெட்டப்

விஜய் டிவியின் வீக் எண்டு ஷோவில் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட, பேசப்பட்ட ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது ‘கலக்கப்போவது யாரு’ தான். அந்த வகையில் கிட்டத்தட்ட 8 சீசன்களாக ஒளிபரப்பாகி இருக்கும் இந்த ஷோ மூலம் பலரும் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நகைச்சுவை நட்சத்திரங்களாக வளர்ந்துள்ளனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அறிமுகமான ஒரு பட்டிமன்ற பேச்சாளர் தான் அறந்தாங்கி நிஷா.

சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தும் தமிழ், கைது செய்யும் போலீசார் – ‘தமிழும் சரஸ்வதியும்’ அடுத்த எபிசோட்!

தனது தனித்துவமான ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் இன்று வரை மக்களை மகிழ்வித்து வரும் நிஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பயணித்து வரும் அறந்தாங்கி நிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘பிக்பாஸ் ஜோடிகள்’ மற்றும் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஆகிய நிகழ்ச்சிகளில் பிசியாக கலந்து கொண்டு வருகிறார். இது தவிர தன்னைத்தானே சின்னத்திரை நயன்தாரா என வர்ணித்து கொள்ளும் நிஷா, ‘மாரி 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் சில முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் – போட்டியாளர்களுக்குள் பிளவு? வெளியான ப்ரோமோ!

இந்நிலையில் நிஷா தற்போது கலந்து கொண்டு வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்காக தனது தோற்றத்தை தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வடிவேலு போல மாற்றி இருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். என்ன getupnu சொல்லுங்க’ என கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமீபத்தில் முடிந்துள்ள ‘நாய் சேகர்’ பட டைட்டில் விவகாரத்துடன் சேர்ந்து வைரலாகி வரு

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here