சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தும் தமிழ், கைது செய்யும் போலீசார் – ‘தமிழும் சரஸ்வதியும்’ அடுத்த எபிசோட்!

0
சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தும் தமிழ், கைது செய்யும் போலீசார் - 'தமிழும் சரஸ்வதியும்' அடுத்த எபிசோட்!
சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தும் தமிழ், கைது செய்யும் போலீசார் - 'தமிழும் சரஸ்வதியும்' அடுத்த எபிசோட்!
சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தும் தமிழ், கைது செய்யும் போலீசார் – ‘தமிழும் சரஸ்வதியும்’ அடுத்த எபிசோட்!

விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில், சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கும் தமிழுக்கு ஷியாம் குறித்த உண்மை தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து திருமணத்தை நிறுத்த திட்டமிடும் தமிழ், போலீசிடம் சிக்கி கொள்வதாக அடுத்த கட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.

தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் சமீபகாலமாக மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ள ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பள்ளி படிப்பை முடிக்காத தமிழ் நல்ல, படித்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால் காலப்போக்கில் தமிழுக்கு, சரஸ்வதி மீது காதல் வருகிறது. ஆனால் தமிழின் காதல் விஷயம் சரஸ்வதியின் வீட்டுக்கு தெரிந்ததும், அவசர அவசரமாக மாப்பிளை பார்த்து சரஸ்வதிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் திட்டமிடுகின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் – போட்டியாளர்களுக்குள் பிளவு? வெளியான ப்ரோமோ!

அதே போல ஷியாம் என்பவரை சரஸ்வதிக்கு நிச்சயம் செய்ய, அவர் நல்லவர் இல்லை என்ற உண்மை பின்பு தான் தமிழுக்கு தெரிய வருகிறது. தமிழ் கூறும் விஷயத்தை ஏற்றுக்கொள்ளாத சரஸ்வதியின் பாட்டி, அந்த விஷயத்தை சரஸ்வதி ஆதாரத்துடன் நிரூபிக்கையில் அதனை ஏற்றுக்கொள்கிறார். இப்போது சரஸ்வதிக்கு நடக்க இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழிடம் உதவி கேட்கிறார் பாட்டி.

குடும்பத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் வெங்கட் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

இந்தவாறு ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் கதைக்களம் இதுவரை வெளியாகி இருக்கிறது. இதற்கு அடுத்ததாக அந்த சீரியலின் புதிய எபிசோடுகளுக்கான கதைக்களம் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதாவது சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கும் தமிழ், சில சூழ்ச்சிகள் காரணமாக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவது போல சில தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் வரும் வார எபிசோடுகளில் ஒளிபரப்பாகலாம் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here