குடும்பத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் வெங்கட் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
குடும்பத்துடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் வெங்கட் - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
குடும்பத்துடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர் வெங்கட் - வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
குடும்பத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் வெங்கட் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல் நடித்து வரும் நடிகர் வெங்கட், தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

நடிகர் வெங்கட்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கானா காணும் காலங்கள்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக சின்னத்திரையுலகில் பயணித்து வருபவர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் வெங்கட். இத்தனை ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் நடிகர் வெங்கட் கிட்டத்தட்ட 10 சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு என புதிய அடையாளத்தை கொடுத்தது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

குழந்தைக்காக வெண்பாவிடம் கெஞ்சும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு வீடியோ!

இந்த தொடரில் ஜீவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட், குடும்பத்திற்கு பொறுப்பான அண்ணனாக, நல்ல மகனாக அந்த சீரியலுக்கு இன்று வரை தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் வெங்கட் சமீபத்தில், ஒரு முக்கிய தொலைக்காட்சியின் பிரபலமான தொடரில் இருந்து விலகி இருந்தார். இது தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட முக்கிய பொருளாக இருந்தது.

‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

இந்த களேபரங்களுக்கு மத்தியில் நடிகர் வெங்கட் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் வெங்கட்டின் இத்திருமணம் ஒரு காதல் திருமணம் ஆகும். பொதுவாக தனது குடும்பத்தின் மீது அதீத அக்கறை கொண்ட வெங்கட், இது குறித்து சில நிகழ்ச்சிகளில் பேசியும் இருக்கிறார். இந்நிலையில் வெங்கட் தனது மனைவி அஜந்தா மற்றும் மகள் தேஜஸ்வினி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட அந்த அழகான குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!