விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் – போட்டியாளர்களுக்குள் பிளவு? வெளியான ப்ரோமோ!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் - போட்டியாளர்களுக்குள் பிளவு? வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் - போட்டியாளர்களுக்குள் பிளவு? வெளியான ப்ரோமோ!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதல் – போட்டியாளர்களுக்குள் பிளவு? வெளியான ப்ரோமோ!

விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான டாஸ்க்குகள் துவங்கியுள்ள நிலையில், நடிகர் ராஜ் கூறிய சில கருத்துக்கள் போட்டியாளர்களிடையே சலசலப்பை ஏற்பாடுத்தியவாறு புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ

தற்போது புதிதாக துவங்கியிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5க்கான நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டமே சில கருத்து வேறுபாடுகளுடன் துவங்கியுள்ளது. பொதுவாக இதுவரை வெளியான ‘பிக்பாஸ்’ சீசன்களில் ஒரு 2 அல்லது 3ஆவது வாரத்தில் தான் சிறிய சிறிய பிரச்சனைகள் உருவாகும். அந்த வகையில் இந்த சீசனிலும் முதல் வார எபிசோடுகள் எல்லாம் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகி இருக்கும் எபிசோடுக்கான ப்ரோமோ சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது.

குடும்பத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் வெங்கட் – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான டாஸ்கில் போட்டியாளர்கள் பலரும் தங்களது கடந்த கால வாழ்க்கை மற்றும் அனுபவங்கள் குறித்து போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த வகையில் இசைவாணி தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்த சில விஷயங்களை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரான சின்னப்பொண்ணு கூறிய பதிவுகளுக்கு நடிகர் ராஜு தனது முதல் கருத்தை பதிவு செய்துள்ளார்.

குழந்தைக்காக வெண்பாவிடம் கெஞ்சும் கண்ணம்மா – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பு வீடியோ!

அதாவது, ‘எல்லாரும் அவர்களின் கஷ்டத்தை சொல்லக்கூடிய இடம் தான் இது. ஆனால் உங்கள் பாட்டில் இருந்த உயிர் அந்த கதையில் இல்லை. எல்லாரும் சூப்பர் என்று சொன்னால் நாம் வளர மாட்டோம். நமக்கு முன்னாள் ஒரு சுவர் இருந்தால் தான் அதை உடைக்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்ட போட்டியாளர்கள் சின்னப்பொண்ணுவை தேற்றுவது போல இருக்கும் சில காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. இந்த ப்ரோமோவால் பிக்பாஸ் போட்டிக்களம் சற்று சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here