அமீர் மீது கொண்ட காதலை உறுதிபடுத்திய பிக் பாஸ் பாவ்னி – வைரல் வீடியோ! ரசிகர்கள் குஷி!

0
அமீர் மீது கொண்ட காதலை உறுதிபடுத்திய பிக் பாஸ் பாவ்னி - வைரல் வீடியோ! ரசிகர்கள் குஷி!
அமீர் மீது கொண்ட காதலை உறுதிபடுத்திய பிக் பாஸ் பாவ்னி - வைரல் வீடியோ! ரசிகர்கள் குஷி!
அமீர் மீது கொண்ட காதலை உறுதிபடுத்திய பிக் பாஸ் பாவ்னி – வைரல் வீடியோ! ரசிகர்கள் குஷி!

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் தொடங்கிய ஒரு தலை காதல் தற்போது இருபக்கமும் மாறியுள்ளதா என்ற ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பாவ்னி கொடுத்த ஓபன் டாக் வீடியோ மற்றும் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் மூலம் காதல் உறுதியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகவும் பேசப்பட்டு வருகிறது.

அமீரும்,பாவ்னியும்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் உலக அளவில் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வந்த ஒரு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த பிரபலத்துக்கு காரணம் என்னவென்றால் சும்மாவே நம்ம மக்கள் பக்கத்து வீட்டுல சின்ன சண்டை நடந்த கூட என்ன? ஏது ? எப்படின்னு தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் அதுபோலவே இந்நிகழ்ச்சியில் ஒரு வீட்டில் 13 போட்டியாளர்களை கொண்டு தொடங்கப்பட்டு 100 நாட்களும் அங்குள்ளவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்கிறார்கள் மற்றும் அவரவர் உண்மை சுயரூபங்களை காட்டுவது தான்.

உண்மை தெரிந்த பின் ராதிகாவை சந்திக்க செல்லும் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!

பிக்பாஸ் 1 ல் குழந்தை தனமான பேச்சாலும், முக பாவனைகளாலும் ரசிகர் மனதை கொள்ளை கொண்ட ஓவியாவுக்கு எக்கச்சக்கமான ஆர்மிகள் உருவாகியது. அது போல ஒவ்வொரு சீசனிலும் ஒரு சிலர் மட்டுமே அதிகளவு ரசிகர் பெருமக்களை ஈர்ப்பர். அந்த வரிசையில் பிக் பாஸ் 5ல் பாவ்னி மற்றும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அமீரும் தான் அதிகளவு ரசிகர்களை கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அமீரின் வருகைக்கு பின்பு மொத்த கேமரா ஃபோக்கஸ்ஸும் பாவ்னி மீது தான். இவ்வாறு ஷோவில் தொடங்கிய ஒன் சைடு காதல் ட்ராக் தற்போது இரு பக்கமும் ஓகே ஆக உள்ளது போல் மாறி வருகிறது.

அதாவது பிக் பாஸ் வீட்டுக்குள் ரசித்த ஜோடிகளை மீண்டும் ரசிகர்களுக்காக பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் இருவரையும் ஜோடியாக களம் இறக்கியது விஜய் டிவி. இந்த ஷோவில் பிரியங்காவும் ராஜூவும் அமீரையும், பாவ்னியையும் வச்சி பயங்கரமாக கலாய்ப்பதற்கு ஏற்றவாறு போன வார எபிசோடில் பாவ்னி, எனக்கு அமீரை பிடிக்கும் ஆனால் காதலை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் டைம் வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்த எபிசோடு டிவியில் ஒளிபரப்பாகியதிலிருந்து ரசிகர்களுக்கு ஒரே குஷிதான். ஆனாலும் இன்னும் முழுமையாக எந்த விவரமும் வெளிவரவில்லை.

Exams Daily Mobile App Download

இப்படி இருக்கையில் பாவ்னி தனது இன்ஸ்டாவில் கேன்டில் லைட் டின்னரில் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ஷேர் செய்து ’காதலை உணர்கிறேன்’ என்று கேப்ஷன் வைத்துள்ளார். அதன் மூலம் பாவ்னியும் காதலிக்க தொடங்கி விட்டார் என்பதை ரசிகர்கள் உறுதியாக்கி விட்டனர். ஆனால் அந்த நபர் யார் என்று தான் இன்னும் புரியாத புதிராக உள்ளது என்று தொடர்ந்து கமெண்ட் பகுதியில் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பாவ்னி உண்மையை சொன்னால் மட்டுமே அது யார் என்பது தெரிய வரும். அதே போல் இந்த கேப்ஷனுக்கு ’உண்மை’ என்று சூப்பர் சிங்கர் ஆங்கர் பிரியங்காவும் கமெண்ட் செய்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here