பிக் பாஸ் 3வது வாரத்தில் வெளியேற இருக்கும் போட்டியாளர் இவர்தான் – வாக்கு பட்டியல் வெளியீடு!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூன்றாவது வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒரு சர்வதேச நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைந்தது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி கடந்த அக்.3 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போது 2 வாரங்கள் முடிந்து மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் முதல் வாரத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இருவர் வீட்டை விட்டு வெளியே சென்று தற்போது 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கண்ணம்மா காலில் விழும் சௌந்தர்யா – பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள்!
மேலும் முதல் வாரத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இரண்டாவது வாரத்தில் போட்டியாளர்களுக்கு இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெறுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக அபிஷேக் தான் இருக்கிறார். அவரை சிலர் நம்பி தங்களது பெயரை கெடுத்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ஸ்க்ரீனில் தெரியவே இல்லை அதற்கு காரணம் அபிஷேக் தான், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவரே எல்லாம் செய்கிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ – போட்டியாளர்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற வாய்ப்பு!
இந்நிலையில் இந்த வார எலிமினேஷனில் 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மேலும் வீட்டின் தலைவராக சிபி இருக்கிறார். தற்போது ஒரு டாஸ்க் நடைபெறுகிறது. அதில் யாராவது காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் குறைவான வாக்குகளுடன் அபிஷேக் கடைசி இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னதாக சின்ன பொண்ணு குறைவான வாக்குகளுடன் இருக்கிறார்.