Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!
Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!
Vijay TV Bigg Boss 5 Promo | பிக்பாஸ் வீட்டின் ஏழாவது வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஏழாவது வாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான முதல் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது ஆறு வாரம் முடிவடைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் தலைவர் போட்டி நடைபெற்றது. அதில் பிரியங்கா, சிபி, ஐக்கி, நிரூப் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் மற்ற போட்டியாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் பிரியங்கா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் நீர் நாணயம் வைத்திருக்கும் வருண் இந்த வாரம் ஆதிக்கம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரோஷினியின் முதல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அதில் ராஜு டாஸ்க் பற்றி விவரிக்கிறார். டாஸ்க் பெயர் உள்ளதை உள்ளபடி காட்டு, என்பதாகும். அதில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட இருக்கின்றனர். முதல் டீம்மில் இருப்பவர்கள் இரண்டாவது டீமில் இருப்பவர்களை போல நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும். டீம் எ கண்ணாடியாக மாறி டீம் பி போல செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜோடிகளின் விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி அக்ஷரா சிபி போல நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர், முல்லை ஜோடி – மெகா சங்கமம் ஷூட்டிங்!

மேலும் இசைவாணி என தொடங்க இமான் அண்ணாச்சி தான என அவரே சொல்கிறார். மேலும் இந்த டாஸ்க் மிகவும் காமெடியாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் டாஸ்க் இறுதியில் அக்ஷரா சிபி பற்றி எதோ சொல்லி அழுவது போல காட்டப்படுகிறது. தொடர்ந்து அக்ஷரா சிபி இடையே சண்டை நடக்கிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்களில் யார் சிறப்பாக போட்டியிட இருக்கின்றனர் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!