‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!

0
'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை - ரசிகர்கள் உற்சாகம்!
'குக் வித் கோமாளி' சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை - ரசிகர்கள் உற்சாகம்!
‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிக் பாஸ் தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தாமரை செல்வி. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் தாமரை:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் தாமரை எலிமினேட் செய்யப்பட்டார். அதனால் மக்கள் கோவமாக இருக்கும் நிலையில் பலர் அந்த 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என கருத்து சொன்னார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் இன்னும் வீடு திரும்பவில்லை அவர் இறுதி சுற்றில் கலந்து கொள்ள இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘பாக்கியலட்சுமி’ இனியா நேஹாவின் புதிய கெட்அப்பில் வைரலாகும் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தாமரை வெளியேறினாலும் அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மக்களின் ஆதரவை பெற்ற குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியான நிலையில் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக தாமரை களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தாமரை நன்றாக சமைப்பதாக பிரியங்கா சொல்லி இருக்கிறார்.

அதனால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. மேலும் வித்யூ லேகா, விஜயலக்ஷ்மி, கருணாஸ் மனைவி, மனோபாலா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ஐஸ்வர்யா பாஸ்கர், அமித், நந்தன், இர்பான், அந்தோணி தாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கோமாளியாக மூக்குத்தி முருகன், பரத் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!