அப்பாடா.. ஒரு வழியா முடிச்சாங்களே.. கடைசி எபிசோடுக்கு தயாரான பாரதி கண்ணம்மா – ரொம்ப சந்தோசம்!

0
அப்பாடா.. ஒரு வழியா முடிச்சாங்களே.. கடைசி எபிசோடுக்கு தயாரான பாரதி கண்ணம்மா - ரொம்ப சந்தோசம்!
அப்பாடா.. ஒரு வழியா முடிச்சாங்களே.. கடைசி எபிசோடுக்கு தயாரான பாரதி கண்ணம்மா - ரொம்ப சந்தோசம்!
அப்பாடா.. ஒரு வழியா முடிச்சாங்களே.. கடைசி எபிசோடுக்கு தயாரான பாரதி கண்ணம்மா – ரொம்ப சந்தோசம்!

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் ஆரம்பத்தில் சற்று விறுவிறுப்பாக சென்றாலும் தற்போது ரசிகர்களுக்கு போர் அடித்து விட்டது. தற்போது இந்த தொடர் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

2020 ஆம் ஆண்டின் நடுவில் சின்னத்திரை என்றாலே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் அருண், ரோஷினி ஆகியோர் முக்கிய ஜோடியாக நடித்தனர். பின்னர் ரோஷினி இந்த சீரியலை விட்டு விலக ஒவ்வொரு பிரபலமாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்கள். மெல்ல மெல்ல இதன் TRP-யும் சரிய தொடங்கியது. தற்போது கண்ணம்மா ரோலில் வினுஷா நடிக்கிறார்.

சமீப காலமாக இந்த தொடரில் தீவிரவாதிகள் ஹாஸ்பிடலில் உள்ளவர்களை அடைத்து வைத்து இருப்பது போன்ற சீன்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தொடரின் ப்ரோமோ ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மருத்துவமனைக்குள் அதிரடி படையினர் உள்ளே நுழைந்து எல்லோரையும் காப்பாற்றுகிறார்கள். அந்த நேரத்தில் கண்ணம்மா பாரதியை தேட அவரை காணோம் என்று தேடி செல்கிறார்.

வீட்டை விற்பதை நினைத்து வருத்தப்படும் மூர்த்தி, சண்டைக்கு வந்த பார்வதி, மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

ஆனால் தீவிரவாதிகள் அவரை ஒரு அறையில் கட்டி தொங்கவிட்டு அவர் உடலில் டைம்பாம் வைத்துள்ளனர். கண்ணம்மாவை வர வேண்டாம் என அவர் தடுக்கிறார். ஆனால் கண்ணம்மா அங்கிருந்து செல்லாமல் அவரை கட்டிபிடித்து கொள்கிறார். இந்த சீரியலின் கதையே பாரதி கண்ணம்மா பிரிந்து வாழ்வது தான். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்துவிட்டால் கதை முடிவுக்கு வந்துவிடும். எனவே இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா முடிய போகிறதா என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!