புதிய கண்ணம்மா வினுஷாவுடன் இணைந்த பாரதி – வெளியான புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
புதிய கண்ணம்மா வினுஷாவுடன் இணைந்த பாரதி - வெளியான புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
புதிய கண்ணம்மா வினுஷாவுடன் இணைந்த பாரதி - வெளியான புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
புதிய கண்ணம்மா வினுஷாவுடன் இணைந்த பாரதி – வெளியான புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது புதிய கண்ணம்மாவாக களமிறங்கி இருக்கும் நடிகை வினுஷாவை வரவேற்கும் விதமாக நடிகர் அருண் பிரசாத் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 650வது எபிசோடுகளை எட்டி இருக்கிறது. இந்த சீரியலில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மறைக்கப்பட்டு வந்த உண்மைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையேயான விவாகரத்து பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்தது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!

கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து சந்தித்து கொள்ளும் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே அவ்வப்போது எழும் சிறிய மோதல்களுக்கு இடையே புரிதலும் உருவாகி இருந்த நிலையில் இந்த விவாகாரத்து பிரச்சனைகள் புதிதாக உருவானது. ஆனால் இதற்கும் முடிவு கட்டும் விதமாக, அடுத்த 6 மாத காலம் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து இருக்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு கூறி இருக்கிறது. இதனால் பாரதியும் கண்ணம்மாவும் இனி ஒரே வீட்டில் சேர்ந்து இருக்க போகிறார்கள்.

பாக்கியா வீட்டிற்கு வரும் ஜெனி, சந்தோசத்தின் உச்சியில் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்படி இருக்க சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக களமிறங்கி இருக்கும் நடிகை வினுஷா தேவிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வினுஷா நடித்திருக்கும் கோர்ட் காட்சிகள் இந்த வாரம் முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் குழுவுடன் புதிதாக இணைந்திருக்கும் நடிகை வினுஷா தேவியை வரவேற்கும் விதமாக நடிகர் அருண் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!