பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

0
பிரசவத்திற்கு பின்
பிரசவத்திற்கு பின் "பாரதி கண்ணம்மா" வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ - குவியும் லைக்குகள்!
பிரசவத்திற்கு பின் “பாரதி கண்ணம்மா” வெண்பா கணவருடன் வெளியிட்ட வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வில்லி பரீனா பிரசவத்திற்கு பின் தனது கணவருடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியலில் இளம் வில்லியாக கலக்கி வருபவர் நடிகை பரீனா. அவர் சின்னத்திரையில் முதன்முறையாக தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பின் அவருக்கு பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ரகுமான் என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. TRPயில் முன்னிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் கர்ப்பமாக இருந்தார். அதனால் அவர் சீரியலை விட்டு விலகுவாரா என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

ஆனால் அவர் தொடர்ந்து நிறைமாதம் வரை சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ZAYN என்ற பெயரை சூட்டி அந்த நிகழ்வை பெரிய விழாவாக நடத்தி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் நடிகர் ஆரி கலந்து கொண்டார். ஓரு மாத கால இடைவெளிக்கு பின் சீரியலில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார் பரினா. இது குறித்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள் – முழு விபரம் இதோ!

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வெண்பா பல ரீல்ஸ் வீடியோ மற்றும் குழந்தையின் புகைப்படத்தை அடிக்கடி பதிவிட்டு வருவார். தற்போது தனது கணவருடன் இணைந்து காமெடி டயலாக் ஒன்றை பேசி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வெண்பா மட்டுமே நன்றாக நடிப்பார் என நினைத்தால் அவரது கணவரும் நன்றாக நடிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!