மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் சட்டசபை அரசு தனது ஊழியர்களுக்கு அவர்களின் அகவிலைப்படியை 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அரசு ஊழியர்களின் புத்தாண்டு பரிசாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

உத்தரபிரதேச மாநில அரசு நவம்பர் மாதம் அரசு ஊழியர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது. இந்த உத்தரவில், ஜனவரி 1, 2016 முதல் திருத்தியமைக்கப்பட்ட ஊதியம் பெற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் அடிப்படை ஊதியத்தில் 28 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2021 வரை, அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவீதமாக இருக்கும். 1 ஜனவரி 2006 திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தைப் பெறும் ஊழியர்கள் 1 ஜூலை 2021 முதல் அடிப்படை ஊதியத்தில் 189 சதவீத டிஏவைப் பெறுவார்கள். இந்த ஊழியர்கள் ஜனவரி 1, 2016 முதல் திருத்தப்பட்ட ஊதியக் குழுவைத் தேர்ந்தெடுக்காதவர்கள் அல்லது ஊதிய விகிதம் திருத்தப்படாதவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு & பதவிகள் – முழு விபரம் இதோ!

ஊதியக் குழுவின் முதல் அறிக்கையின் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட முடிவின்படி ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான காலகட்டத்தில், அடிப்படை ஊதியத்தில் 164 சதவீத டிஏ விகிதம் இருக்கும். கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் ராதா சவுகான் உத்தரவின்படி, 5 மாத நிலுவைத் தொகை டிஏ, பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதாவது ஜூலை 1 முதல் டிசம்பர் 1 வரையிலான நிலுவைத் தொகை பிஎஃப் கணக்கிற்குச் செல்லும். மேலும்,நிலுவைத் தொகை டிசம்பர் 31, 2022 வரை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அரசாணை வெளியாவதற்கு முன்னால் ஓய்வு பெற்றவர்கள் அல்லது 6 மாதங்களில் நிலுவையில் உள்ளவர்களுக்கு டிஏ பாக்கித் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு – டிச.25 முதல் தொடக்கம்!

கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.ராதா சவுகானின் உத்தரவின்படி, ஜூலை 1, 2021 முதல் 5வது ஊதியக் குழு ஊழியரின் டிஏ 356% லிருந்து 368% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஆறாவது ஊதியக் குழுவின் ஊழியர்களின் டி.ஏ 189% இல் இருந்து 196% ஆக உயர்த்தப்படுகிறது. இது தவிர, ஜூலை 1, 2021 முதல், மாநிலத்தில் பணியமர்த்தப்பட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு 28 க்கு பதிலாக 31 சதவீதம் என்ற விகிதத்தில் DA தற்போது வழங்கப்படும். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது உயர்த்தப்படும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!