கண்ணம்மாவின் சமையலை ரசித்து சாப்பிடும் பாரதி, பெருமிதத்தில் கண்ணம்மா – சீரியலில் வரவிருக்கும் திருப்பம்!!

0
கண்ணம்மாவின் சமையலை ரசித்து சாப்பிடும் பாரதி, பெருமிதத்தில் கண்ணம்மா - சீரியலில் வரவிருக்கும் திருப்பம்!!
கண்ணம்மாவின் சமையலை ரசித்து சாப்பிடும் பாரதி, பெருமிதத்தில் கண்ணம்மா - சீரியலில் வரவிருக்கும் திருப்பம்!!
கண்ணம்மாவின் சமையலை ரசித்து சாப்பிடும் பாரதி, பெருமிதத்தில் கண்ணம்மா – சீரியலில் வரவிருக்கும் திருப்பம்!!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதிக்கு, சமைத்து கொடுக்கும் கண்ணம்மா பாரதி சாப்பிடுவதை ரசிப்பது போல இன்றைய கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

சமீபத்திய எபிசோடுகள் மூலம் தொடர்ச்சியாக மக்களை மகிழ்வித்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது சில முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் அடுத்த 6 மாத காலத்திற்கு ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இப்போது பாரதி, கண்ணம்மா வீட்டில் வந்து தங்கி இருக்கிறார். இதன் மூலம் இருவருக்கும் இடையே இருந்த பிரிவு மெல்ல மெல்ல குறைய துவங்கி இருக்கிறது.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகம் – அரசாணை வெளியீடு!!

இப்போது, கண்ணம்மா வீட்டிற்கு வந்த ஆரம்பத்தில் அவருடன் சண்டை போட்டு விட்டு தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என திட்டம் போட்ட பாரதியை, கண்ணம்மா ஒருவழியாக தன் பக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் கண்ணம்மா சமைத்ததை சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருக்கும் பாரதி, கடைசியில் கண்ணம்மா பறிமாறி விட திருப்தியாக சாப்பிடுவது போல சில காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பிடித்துள்ளது.

சரவணனை போட்டியில் ஜெயிக்க விடாமல் அர்ச்சனா சதித்திட்டம் – ராஜா ராணி 2 ட்விஸ்ட்!

இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், பாரதிக்கு பிடித்த ஆப்பம் செய்திருக்கும் கண்ணம்மா அதை பாரதிக்கு பரிமாறுகிறார். அந்த சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடும் பாரதியை பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார் கண்ணம்மா. தொடர்ந்து, பாரதி சாப்பிடுவதை பார்க்கும் கண்ணம்மா, வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு நன்றாக சாப்பிடுகிறார் என அக்கறையுடன் நினைத்து கொள்வது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here