கண்ணம்மாவை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மாவை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

கண்ணம்மாவை விவாகரத்து செய்யவே கூடாது என ஹேமா அடம் பிடித்ததால் தான் விவாகரத்து செய்ய வேண்டும் என பாரதி கூறினார். அதேபோல தற்போது கண்ணம்மாவை திருமணம் செய்ய வேண்டும் என ஹேமா அடம்பிடிக்கும்படியும் பாரதி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதிகண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரில் பாரதி கண்ணம்மாவை மீண்டும் ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், பாரதிகண்ணம்மா தொடரை தொடர்ந்து பார்த்தால் அனைவருக்குமே பைத்தியம் பிடித்து விடும். அந்த அளவுக்கு சீரியலை இழுத்து கொண்டிருக்கின்றனர். ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து விட்டால் கதையே முடிந்துவிடும். ஆனால், அதை மட்டும் செய்யாமல் சீரியலை கண்ட போக்கில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஆரம்பத்தில் லட்சுமிக்கு மட்டுமே பாரதி தான் தன்னுடைய அப்பா என்கிற உண்மை தெரியும். ஆனால், தற்போது ஹேமாவிற்கும் கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்கிற உண்மை தெரிந்துவிடுகிறது. கண்ணம்மாவினை விவாகரத்து செய்ய வேண்டாம் என குடும்பத்தினர்கள் அனைவரும் பாரதியிடம் கெஞ்சிய போது பாரதி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், தற்போது ஹேமா அடம் பிடித்த காரணத்தினால் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய மாட்டேன் என ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

லட்சுமியும் இந்த விஷயத்தைக் கேட்டு துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவிடம் கேசரி செய்ய சொல்லி தனது நண்பர்கள் அனைவரிடமும் கொடுக்க வேண்டும் என அவ்வளவு ஆனந்தத்தில் இருக்கிறார். பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்யமாட்டேன் என கூறியதை கேள்விப்பட்டு கண்ணம்மாவை பார்க்க கண்ணம்மாவின் அப்பாவும் வீட்டிற்கு வருகிறார். இதற்குப் பிறகு சமையல் அம்மாவை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என சாப்பிடாமல் நான் அடம் பிடிக்க போகிறேன். கண்டிப்பாக அப்பா எனக்காக சமையல் அம்மாவை திருமணம் செய்து கொள்வார் என ஹேமா கூறுகிறார். இதற்கு பிறகு கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!