இந்தியாவில் True Callerக்கு இணையான ‘Bharat Caller’ செயலி – புதிய அறிமுகம்!
ஒருவரது மொபைல் எண்ணுக்கு அழைப்புகள் வரும் போது, அழைக்கும் நபர் யாரென்கிற விவரங்களை திரையில் காட்டும் ட்ரூகாலர் செயலி போன்றதொரு ‘பாரத் காலர்’ செயல்பாடுகள் இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் காலர்
சொந்த காலர் ID அல்லது ‘பாரத் காலர்’ எனப்படும் ட்ரூ காலர் போன்ற பயன்பாடுகள் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரத் காலர் செயல்பாடுகள், ஒரு பயனருக்கு வரும் அழைப்புகளின் போது அழைப்பவர் பெயர், இருப்பிடம் குறித்த விவரங்களை கொடுக்கிறது. இந்த பயன்பாடு பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் என்றும், சில அம்சங்களில் True Caller ஐ விட முன்னிலையில் இருப்பதாகவும் அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றும் புதிய திட்டம் – நீர்வளத்துறை அமைச்சர் அறிவிப்பு!
இந்த பாரத் அழைப்பாளர் ID, சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர் தரவுத்தளங்களையும், உலக சமூகத்திலிருந்து 1 பில்லியனுக்கும் அதிகமான எண்களின் தரவையும் கொண்டுள்ளது. இந்த செயலி பயனர்களின் தகவல் தொடர்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரே பயன்பாடு என பிளேஸ்டோர் விளக்கம் கொடுத்துள்ளது. இந்த புதிய அறிமுகமான பாரத் காலரை பெங்களூரில் உள்ள மதிப்புமிக்க இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) முன்னாள் மாணவர் பிரஜ்வால் சின்ஹா உருவாக்கியுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இந்த பயன்பாடு தற்போது பிளேஸ்டோர் மற்றும் iOS இல் இலவசமாக கிடைக்கிறது. மேலும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை 6,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாரத் காலரின் முக்கிய அம்சங்களாக சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி,
- பாரத்காலர் அதன் சேவையகத்தில் பயனர்களின் தொடர்புகள் மற்றும் அழைப்பு பதிவுகளை சேமிக்காது. பயனர்களின் தனியுரிமை பாதிக்கப்படாது.
- மேலும், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பயனர்களின் தொலைபேசி எண்களை சேமிக்க மாட்டார்கள்.
- பாரத் காலரின் எல்லா தரவும் Encrypted வடிவத்தில் சேமிக்கப்படுகிறது.
- தவிர இந்தியாவிற்கு வெளியே அதன் சேவையகத்தை யாரும் பயன்படுத்த முடியாது.
இந்த செயலியில் ஆங்கிலம் தவிர இந்தி, மராத்தி, தமிழ், குஜராத்தி போன்ற மொழிகளிலும் பயன்பாட்டில் உள்ளது. - தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக ட்ரூ காலரை இந்திய ராணுவம் தடை செய்த பிறகு, பாரத் காலர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.