விரைவில் ‘பாரத் பந்த்’, பள்ளிகளுக்கு விடுமுறை – போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

0
விரைவில் 'பாரத் பந்த்', பள்ளிகளுக்கு விடுமுறை - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
விரைவில் 'பாரத் பந்த்', பள்ளிகளுக்கு விடுமுறை - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
விரைவில் ‘பாரத் பந்த்’, பள்ளிகளுக்கு விடுமுறை – போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்தால் கடுமையான வன்முறை கலவரம் நிகழும் என்பதால் எக்கச்சக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அக்னிபாத் திட்டம்

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்களை சேர்ப்பதற்கான புதிய திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள அக்னிபாத் என்னும் புதிய திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த திட்டத்தை திரும்பப் பெற முடியாது என இந்திய ராணுவம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த எதிர்ப்பை தெரிவித்து சில அமைப்புகள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை துவக்கம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான கலவரம் வெடிக்கும் என்பதனால் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் மாநில ரயில்வே காவல்துறையை உஷார் நிலையில் இருக்கும்படி அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும், வன்முறை கலவரத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடும் போது செல்போன்கள், வீடியோ பதிவு சாதனங்கள் மற்றும் சிசிடிவி கேமரா உதவியுடன் இந்த கலவரத்தை படம் பிடிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் காரணமாக பீகாரில் மட்டுமே குறைந்தது 20 மாவட்டங்களில் இன்று இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இதுமட்டுமில்லாமல் பஞ்சாப் மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் ராணுவ தளங்களிலும் பயங்கர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பீகார், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, தெலுங்கானா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக வன்முறை நிகழ்ந்து வருவதால் இந்த பகுதிகளில் மட்டும் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அக்னிபாத் திட்டத்தைப் பற்றி போலியான செய்தியை பரப்புபவர்கள் மீது சைபர் கிரைம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!