இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்

0

இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம்

ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி வழிபாடு பற்றி ஏற்கனவே அறிந்துகொண்டோம். சைவ சமய நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் பல்லவ, பாண்டிய, சோழர் ஆட்சிக் காலங்களில் பக்தி உணர்வைப் பரப்பினார்கள். ஆனால், இடைக்கால இந்திய பக்தி இயக்கத்தின் தன்மை வேறுபட்டதாகும். இந்தியாவில் இஸ்லாமிய சமயம் பரவியதால் ஏற்பட்ட விளைவுகளின் பயனாக எழுந்ததே இடைக்கால பக்தி இயக்கம். ஒரு கடவுட்கொள்கை, சமத்துவம், சகோதரத்துவம், சடங்குகளை புறக்கணித்தல் போன்றவை இஸ்லாத்தின் தன்மைகளாகும். இத்தகைய இஸ்லாமிய கருத்துக்கள் அக்கால சமயத் தலைவர்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும், சூஃபித்துறவிகளும் பக்தி இயக்க சீர்த்திருத்தவாதிகளான ராமானந்தர், கபீர், நானக் போன்றவர்களின் சிந்தனைகளை தட்டியெழுப்பினர்.

சூஃபி இயக்கம்:

  • இடைக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு சமயத்தலைவர் குருநானக் இஸ்லாமிய சமயத்திற்குள் தோன்றிய தாராள சீர்திருத்த இயக்கமே சூஃபி இயக்கமாகும். பராசீகத்தில் தோன்றிய சூஃபி இயக்கம் பதினொன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது.
  • லாகூரைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்ற முதல் சூஃபித் துறவி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினார். இந்தியாவின் சூஃபித்துறவிகளிலேயே புகழ் மிக்கவர் குவாஜா மொய்னுதீன் சிஸ்தி. அவர் ஆஜ்மீரில் தங்கி தனது கருத்துக்களை பரப்பிவந்தார். அவரது சீடர்கள் சிஸ்தி அமைப்பினர் என்று அழைக்கப்பட்டனர்.
  • மற்றொரு சூஃபித்துறவியான ஷிகாபூதீன் சுஹ்ரவர்தி என்பவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் பகாவுதீனு; சக்காரியா. அவரது சீடர்கள் சுஹ்ரவர்தி அமைப்பினை ஏற்படுத்தினர்.
  • சிஸ்தி அமைப்பபைச் சேர்ந்த மற்றொரு சூஃபித்துறவி நிசாமுதீன் அவுலியா. அவர் மக்களிடையே சிறந்த ஆன்மீகக் கருத்துக்களை பரப்பி வந்தார். இத்தகைய சூஃபித்துறவிகளை, இன்றும் கூட முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏராளமான இந்துக்களும் வழிபட்டு வருகின்றனர். அவர்களது கல்லறைகள் இவ்விரு வகுப்பினரும் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களாகத் திகழ்கின்றன.
  • இறைவனை உணர்வதற்கு அன்பும் பக்தியுமே சிறந்த வழிகள் என்று சூஃபிக்கருத்துகள் வலியுறுத்துகின்றன. மனித குலத்ததின் மீது அன்பு காட்டுவதன் மூலமே கடவுள்மீது அன்பு செலுத்த முடியும். எனவேää மனித குலத்திற்கு சேவை செய்வதன்மூலமே கடவுளுக்கு சேவையாற்;ற முடியும் என சூஃபிகள் நம்பினர்.
  • கடவுள் பற்றி அறிந்து கொள்ள சுய ஒழுக்கம் மிகவும் வலியுறுத்தப்பட்டது. வைதீகு முஸ்லீம்கள் புற ஒழுக்கத்தை வலியுறுத்திய வேளையில், சூஃபிகள் அக ஒழுக்கத்தின் பயனை எடுத்துரைத்தனர்.
  • சடங்குகளை நம்பியிருந்த வைதீக முஸ்லீம்களுக்கு பதிலாக சூஃபிகள் அன்பும் பக்தியுமே முக்திக்கு வழிகள் என உரைத்தனர். ஆன்மீக வளர்ச்சிக்கு குருவின் வழிகாட்டுதல் முக்கியம் என சூஃபிக்கள் கூறினர். சகிப்புத்தன்மையும் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
  • தியானம், நற்செயல்கள், பாவங்களுக்கு வருந்துதல், வழிபாடு நடத்துதல், புனிதப் பயணங்களை மேற்கொள்ளுதல், தானங்களை செய்தல், துறவிகளின் நடைமுறைகளைப் பின்பற்றி ஆசைகளைத் துறத்தல் போன்ற கருத்துக்களும் சூஃபித் துறவிகளால் எடுத்துரைக்கப்பட்டன.
  • இத்தகைய வைதீகத்தன்மையற்ற தாராளக் கருத்துக்கள் அடங்கிய சூஃபிதத்துவம் பக்தி இயக்கப் பெரியார்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
  • பிற்காலத்தில், முகலாயப் பேரரசர் அக்பர் சூஃபிக் கோட்பாடுகளைப் பாராட்டினார். அவரது சமய நோக்கு மற்றும் சமயக் கொள்கைகளையும் அவை உருவாக்கின.
  • சூஃபி இயக்கம் இந்தியாவில் பரவிக் கொண்டிருந்த அதே வேளையில் இந்துக்களிடையே பக்தி இயக்கம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.
  • அன்பு மற்றும் சுயநலம் கலவாத பக்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இவ்விரு இயக்கங்களும் இரண்டு வகுப்பினரின் ஒற்றுமைக்கும் வழிவகுத்தன.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

பக்தி இயக்கம்

  • ஓன்பதாம் நூற்றாணடில் சங்கரர் இந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டு இந்து சமயத்திற்கு ஒரு புதிய மார்க்கத்தை காட்டினார் கேரளாவிலுள்ள காலடியில் பிறந்தவர் சங்கரர். அவரது கோட்பாடான அத்வைதம் சாமானிய மனிதனின் அறிவுக்கு எட்டக்கூடியதாக இல்லை.
  • மேலும், அத்வைத கோட்பாடான நிர்குண பிரமத்திற்கு எதிராக சர்குணபிரமம் என்ற கருத்தும் தோன்றியது. (நிர்குண பிரம்மம் – கடவுள் குணாதிசயங்களற்றவன். சர்குண பிரம்மம் – கடவுள் குணாதியங்களை உடையவன்)
  • பன்னிரண்டாம் நூற்றாண்டில், சென்னைக்கு அருகில் ஸ்ரீபெரும் புதூரில் பிறந்த இராமானுஜர், தனது ‘விசிஷ்டாம் வைதம்’ என்ற கோட்பாட்டைப்பரப்பினார். அவரது கருத்துப்படி கடவுள் சர்குணபிரமன் அல்லது குணாதி சங்களையுடையவன்.
  • படைப்பு, படைக்கப்பட்ட பொருட்களும் உண்மையானவை, சங்கரர் கூறியதைப் போல மாயை அல்ல என்பது அவர் வாதம். எனவே, கடவுள், ஆன்மா, பொருள் அனைத்தும் உண்மைகளே. ஆனால் கடவுள் மனத்துக்கண் உள்ளது.
  • மற்றவை அனைத்தும் அவரது குணாதிசயங்கள். ராமானுஜர் பிரபத்தி மார்க்கத்தை அல்லது கடவுள் முன்பு சரண் அடைவதை போதித்தார். தாழ்த்தப்பட்ட மக்களை வைணவ சமயத்தை பின்பற்றும்படி ராமானுஜர் அழைப்பு விடுத்தார்.
  • பதின்மூன்றாம் நூற்றாண்டில் கர்நாடகவைச் சேர்ந்த மத்துவர் ஜீவாத்மா, பரமாத்மாவை உள்ளடக்கிய த்வைத தத்துவத்தை பரப்பினர். அதன்படி உலகம் மாயை அல்ல, உண்மை. கடவுள், ஆன்மா, பொருள் ஒவ்வொன்றும் சிறப்பானது தெலுங்கானா பகுதியில் நிம்பார்க்கர், வல்லபாச்சாரியர் வைணவ பக்தியைப் பரப்பினர்.
  • வல்லபாச்சாரியார் வட இந்தியா சென்று அங்கு கிருஷ்ணபக்தியைப் பரப்பினார். அவர் சூத்திரர்களையும் தமது சீடர்களாகக் கொண்டிருந்தார்.
  • மீராபாய் சிறந்த கிருஷ்ண பக்தையாகத்திகழ்ந்தார். அவரது மீராபஜன்கள் ராஜஸ்தானில் பிரசித்தி பெற்றவை. துளசிநாதர் ராமபக்தராக விளங்கினார்.
  • ராமாயணத்தின் இந்தி மொழி வடிவமான ‘ராம் சரித்மனஸ்’ என்ற புகழ்பெற்ற நூலை துளசிதாசர் படைத்தார்.
  • பதினான்கு மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ராமானந்தர், கபீர், நானக் ஆகிய மூவரும் பக்தி இயக்கத்தின் தூண்களாக விளங்கினார். தமக்கு முந்தைய பெரியோர்களிடமிருந்து அவர்கள் பக்தியுணர்வைப் பெற்றனர். ஆனால், மக்களுக்கு புதிய வழிகளைக் காட்டினர்.
  • காலங்காலமாக பின்பற்றப்பட்டுவந்த மூடநம்பிக்கைகளை விட்டொழித்து பக்தி நெறியைக் கடைப்பிடித்து முக்தி பெறுமாறு அவர்கள் சாமானிய மக்களைக் கேட்டுக் கொண்டனர். முந்தைய கால சீர்திருத்தவாதிகளைப் போல, ஒரு குறிப்பிட்ட சமயத்தை அவர்கள்; சார்ந்திருக்கவில்லை.
  • சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. பல கடவுட் கொள்கையைச் சாடிய அவர்கள், ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினர். சிலை அல்லது உருவ வழிபாட்டையும் அவர்கள் இகழ்ந்தனர்.
  • பக்தி நெறிமூலமாக மட்டுமே முக்தி கிட்டும் என்று அசைக்கமுடியாத நம்பிக்கையை அவர்கள் கொண்டிருந்தனர். அனைத்து சமயங்களின் அடிப்படை ஒற்றுமையை அவர்கள் வலியுறுத்தினர்.

ராமானந்தர்:

  • ராமனந்தர் அலகாபாத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் அவர் ராமானுஜரின் சீடராகத் திகழ்ந்தார். பின்னர், அவரது தனிப்பிரிவை நிறுவி பனாரஸ், ஆக்ரா போன்ற இடங்களில் தமது கருத்துக்களை பரப்பினார். அவர் ராமரை வழிப்பட்டார்.
  • முதன்முதலில் பிராந்திய மொழியில் கருத்துக்களை பரப்பியவர் அவரே. ஏளிமையான வழிபாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். பண்டைய சாதிச் சட்டங்களை தகர்ந்தெறிந்தார்.
  • இவ்விரண்டும் பக்தி இயக்கத்திற்கு அவர் அளித்த கொடைகளாகும். சாதி முறையைச் சாடிய ராமனந்தர் தமது சீடர்களை அனைத்து பிரிவுகளிலுமிருந்தும் தேர்ந்தெடுத்தார்
  • அவரது முக்கிய சீடர்கள் வருமாறு:
  1. கபீர் – ஒரு முஸ்லிம் நெசவாளி
  2. ராய்தாசர்– செருப்புத்தைக்கும் தொழிலாளி
  3. சேனா – முடி திருத்துபவர்
  4. சாதனா – மாமிசம் வெட்டுபவர்
  5. தன்னா – ஜாத்இன குடியானவர்
  6. நரஹரி – பொற்கொல்லர்
  7. பிபர் – ராஜபுத்திர இளவரசர்
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

கபீர்:

  • ராமனந்தரின் சீடர்களிலேயே புகழ்மிக்கவர் கபீர். பனாரஸ் நகரில் ஒரு பிராமண விதவைக்கு மகனாகப் பிறந்தார். ஆனால் ஒரு முஸ்லிம் தம்பதியினரால் வளர்க்கப்பட்டார்.
  • அவர்கள் நெசவுத்தொழிலை செய்து வந்தனர். பகுத்தறிவும் ஆற்றல் மிக்க அவர்ää இந்து சமயம் மற்றும் இஸ்லாமிய சமயம் குறித்து நன்கு அறிந்து கொண்டார். இந்து, முஸ்லிம் தத்துவங்களை அவருக்கு எடுத்துரைத்தவர் ராமானந்தர்.
  • இந்து முஸ்லிம்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே கபீரின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
  • சிலை வழிப்பாட்டை கண்டித்த அவர், கடவுள் முன்பு மனிதர் அனைவரும் சமம் என்றுரைத்தார். அனைத்து சமயங்களும் ஒன்றே என்றும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே களிமண்ணால் வடிக்கப்பட்ட பாத்திரங்களே என்று எடுத்துக் கூறினார்.
  • ராமன், அல்லா இருவரும் ஒன்றே! கோயிலும் மசூதியும் ஒன்றே! என வலியுறுத்தினார். கடவுள்மீது பக்தி செலுத்துவதே முக்திக்கு சிறந்த வழி என்று கூறினார்.
  • இதற்கு தூய இதயத்தைப் பெற்றிருப்பதுடன் கொடுங்கோன்மை, நாணயமின்மை, போலிவேடம், கடமை தவறுதல் போன்றவற்றை விலக்கவும் வேண்டும் என்று கூறினார். அவரது சீடர்கள் கபீர்பந்திகள் என்று அழைக்கப்பட்டனர்.

குருநானக்:

  • அவர் சீக்கிய சமயத்தை நிறுவினார். தொடக்கத்தில் கபீரின் சீடராகவும் விளங்கினார். லாகூருக்கு அருகிலுள்ள தால்வாண்டி என்ற இடத்தில் குருநானக் பிறந்தார்.
  • ஜாதி வேற்றுமைகளைச் சாடிய அவர், புனித நதிகளில் நீராடுவது போன்ற சடங்குகளை இகழ்ந்தார். அவரது சமயக் கருத்துக்கள் ஒழுக்கத்தை வலியுறுத்துவமாகும், அதே சமயம் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருந்தன.
  • சுயநலம், பொய்மை, போலி வேடம் போன்றவற்றை விட்டொழிக்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டார். உண்மை, நேர்மை, அன்பு ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கையை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்.
  • ‘அசுத்தங்கள் நிறைந்த இவ்வுலகில் சுத்தமாக இருங்கள்’ என்பது அவரது புகழ்மிக்க வாசகங்களில் ஒன்றாகும்.
  • இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவே அவர் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது சீடர்கள் சீக்கியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • வங்காளத்தில் கிருஷ்ண பக்தியைப் பரப்பிய சைதன்யர் மற்றொரு பக்;தி நெறி பரப்பிய சீர்திருத்தவாதி. துறவறம் பூண்ட அவர் நாடெங்கும் சுற்றி தமது கருத்துக்களைப் பரப்பினர். மனித சகோதரத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
  • சமயம், சாதி அடிப்படையிலான வேறுபாடுகளை அவர் சாடினார். அன்பையும் அமைதியையும் வலியுறுத்திய சைதன்யர், துன்பப்படும் மக்களிடம் பரிவு காட்டினார். குறிப்பாக ஏழைகளிடமும் வலிமை குன்றியோரிடமும் கருணை காட்டினார்.
  • அன்பு, பக்தி, ஆடல், பாடல் மூலம் கடவுளைக் காணலாம் என அவர் நம்பினார். அனைத்து வகுப்பினரையும் தமது சீடர்களாக்கிக் கொண்டார். இன்றும்கூட வங்காளத்தில் சைதன்யரின் போதனைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
  • பதிமூன்றாம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் பக்தி இயக்கத்தை பரப்பியவர் நாமதேவர். அவரது கருத்துக்கள் மகாராஷ்டிர தர்மம் எனப்பட்டது. பகவத் கீதைக்கு விளக்கம் கூறும் ஞானேஷ்வரி என்ற நூலை அவர் எழுதினார். வேறு பல மகான்களும் இடைக்காலத்தில் பக்திநெறியைப் பரப்பி வந்தனர்.
  • ஞானதேவர் அன்பு நெறியைப் போதித்தார். சிலைவழிபாட்டையும் புரோகிதர் முறையையும் அவர் கண்டித்தார். சாதி முறையையும் சாடினார்.
  • பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏகநாதர் சாதி வேறுபாட்டை சாடியதோடு, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கருணை காட்டினார். ஏராளமான இசைப்பாடல்களை எழுதியுள்ளார். அவரது பஜன்களும் கீத்தனைகளும் புகழ்பெற்றவை.
  • மராட்டிய சிவாஜியின் சம காலத்தவரான துக்காராம் மகாராஷ்டிரத்தை சேர்ந்த மற்றொரு பக்தி நெறியாளர். மராட்டிய தேசியம் தோன்றுவதற்குறிய பின்புலம் அவரால் ஏற்படுத்தப்பட்டது. சமூக வேறுபாடுகளை அவர் எதிர்த்தார்.

பக்தி இயக்கத்தின் சிறப்பு:

  • பக்தி இயக்கத்தின் சிறப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு போதனையாளர்களும் தத்தம் பிராந்திய மொழிகளிலேயே எழுதியும் பேசியும் வந்தனர்.
  • எனவே, இந்தி, மராத்தி, வங்காளம், கன்னடம் போன்ற மொழிகள் வளர்ச்சியடைவதற்கு பக்தி இயக்கம் ஊக்கமளித்தது.
  • இம்மொழிகள் வாயிலாக, அவர்கள் தங்களது கருத்துக்களை நேரடியாகவே மக்களுக்கு எடுத்துக் கூறினர். சாதி முறையை பக்தி இயக்கத் தலைவர்கள் ஒருமித்த குரலில் சாடியதால், தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை உயர்வதற்கு பக்தி இயக்கம் வழிவகுத்தது.
  • பக்தி இயக்கம் பெண்களுக்கு சம முக்கியத்துவம் அளித்தமையால் சமுதாயத்தில் அவர்களது நிலை உயரலும் அது வழிவகுத்தது. மேலும், சிக்கலற்ற எளிய சமய வழியை பக்தி இயக்கம் மக்களுக்கு எடுத்துக்கூறியது. கடவுள்மீது தீவிர பக்தி செலுத்துமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
  • கொடைமிகுந்த வாழ்க்கை, மனித குலத்திற்கு சேவை போன்ற புதிய கருத்துக்கள் தோன்றி வளர்ந்தன.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!