EPFO திட்ட பயனாளிகளே… இத்தனை வசதிகளும் உங்களுக்கு தான் – முக்கிய தகவல்கள்!

0
EPFO திட்ட பயனாளிகளே... இத்தனை வசதிகளும் உங்களுக்கு தான் - முக்கிய தகவல்கள்!
EPFO திட்ட பயனாளிகளே... இத்தனை வசதிகளும் உங்களுக்கு தான் - முக்கிய தகவல்கள்!
EPFO திட்ட பயனாளிகளே… இத்தனை வசதிகளும் உங்களுக்கு தான் – முக்கிய தகவல்கள்!

EPFO திட்ட பயனாளிகளுக்கு பல்வேறு வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளது குறித்து இப்பதிவில் பல்வேறு தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPFO பயனாளிகள்:

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் 12% சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக சேமிக்கப்படுகிறது. இதற்காக நிறுவனத்தின் தரப்பில் இருந்தும் 12 சதவீதம் சேமிப்பு தொகை பயனாளிகளின் கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதிய நன்மைகளைத் தவிர பல்வேறு நன்மைகளும் பயனாளிகளுக்கு கிடைக்கின்றது.

  • அவற்றில் பணியாளர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தின் மூலம் வழங்கப்பட்ட வருங்கால வைப்பு நிதியின் தொகையானது 58 வயதிற்கு பிறகு தான் மாதம் தோறும் உங்கள் கைகளுக்கு கிடைக்கும்.
  • குறைந்தபட்சம் இதற்கு நீங்கள் பத்து ஆண்டுகள் நிறுவனத்தில் பணி புரிந்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூபாய் 1000 வழங்கப்படும்.
  • பயனாளிகள் தங்களது நாமினிகளை நியமித்துக் கொள்ளலாம்.
  • இதன் மூலம் சந்தாதாரர் இல்லை என்றாலும் அவரது குடும்பத்தினர் இதன் மூலம் தொடர்ந்து நன்மைகளை பெற முடியும்.
  • EPFO தவிர VPF அதாவது தன்னார்வ வருங்கால வைப்பு நிதி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் அடிப்படை சம்பளத்திலிருந்து பயனாளிகள் கூடுதலான வைப்புத் தொகையை செலுத்த முடியும்.
  • அதன் மூலம் கூடுதலான பலன்களை அடைய முடியும். வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து நீங்கள் பணத்தை எடுப்பதற்கான பல்வேறு விதிமுறைகளும் உள்ளன.

வந்தே பாரத் ரயிலில் இருக்கும் ஒரு நவீன வசதி – புகைப்பிடித்தால் ரயில் இயங்காது! ஷாக் தகவல்!

  • நீங்கள் வேலையை விட்டு இரண்டு மாதங்கள் வேறு வேலையில் சேரவில்லை என்றால், பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
  • மேலும் கணக்கை தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 50 சதவீத தொகையை நீங்கள் திரும்ப பெற முடியும்.
  • உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கான மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காகவும், வீடு வாங்குவது, வீடு கட்டுவது போன்ற விஷயங்களுக்காகவும் PF பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!