நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!

0
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! முழு விபரம் இதோ!

மத்திய அரசாங்கம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்துள்ள மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த எளிய வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு

பல்வேறு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த குடிமக்களுக்காக மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதாவது, நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ சேவையை எளிதாக்குவதற்காக மத்திய உணவு அமைச்சகம், ‘மேரா ரேஷன்’ என்ற புதிய ரேஷன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையானது சொந்த இடங்களிலிருந்து வேலை தேடி வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த குடிமக்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அட்டையை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) பயனாளிகள், குறிப்பாக புலம்பெயர்ந்த பயனாளிகள், FPS டீலர்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய பிற பங்குதாரர்கள் ONORC தொடர்பான பல்வேறு சேவைகளை எளிதாக்குவதற்காக தேசிய தகவல் மையத்துடன் (NIC) இணைந்து இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளை கண்டறியவும், அவர்களின் சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் தகுதியான ரேஷன் அளவை கண்காணிக்கவும் உதவுகிறது.

TN TRB தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

தற்போது மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டில் நான்கு மாநிலங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையானது புலம்பெயர்ந்தோர், தொழிலாளர்கள் அனைவரும் கோதுமை, அரிசி உள்ளிட்ட பிற உணவு தானியங்களை பொது விநியோக அமைப்பிலிருந்தும் (PDS) பெறுவதை உறுதி செய்கிறது. அதே போல NIC ஆல் உருவாக்கப்பட்ட மேரா ரேஷன் பயன்பாடு தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், இந்த செயலியை 14 வெவ்வேறு மொழிகளுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்ய:
  • கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று ‘மேரா ரேஷன்’ என டைப் செய்யவும்.
  • இதில் தோன்றும் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • பின், விண்ணப்பத்தை திறந்து உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
  • இப்போது, சமர்ப்பி என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.
  • தொடர்ந்து ஆதார் எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் உரிமையை சரிபார்க்க முடியும்.
  • மேலும், உங்கள் இருப்பிடங்களை உள்ளிட்டால் அருகிலுள்ள ரேஷன் கடைகளை சரிபார்த்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!