BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் – ரூ.33,450/- வரை ஊதியம்!

0
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் - ரூ.33,450/- வரை ஊதியம்!
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் - ரூ.33,450/- வரை ஊதியம்!
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் – ரூ.33,450/- வரை ஊதியம்!

Broadcast Engineering Consultants India Limited வெளியிட்ட அறிவிப்பில் Medical Record Technician, Technical Assistant/ Technician for (Anesthesia / Operation Theatre), Lab Attendant Gr. II போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 85 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, ஊதியம், பணிக்கு விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Medical Record Technician, Technical Assistant/ Technician for (Anesthesia / Operation Theatre), Lab Attendant Gr. II and Others.
பணியிடங்கள் 85
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

Broadcast Engineering Consultants India Limited-ல் காலியாக உள்ள பணிகளுக்கு மொத்தமாக 85 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Medical Record Technician – 34
  • Technical Assistant/ Technician for (Anesthesia / Operation Theatre) – 41
  • Lab Attendant Gr. II – 03

  • Cashier – 06
  • Radiographic Technician Grade-I – 01
  • Senior Mechanic (A/C &R) – 01
    BECIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு ஏற்ப 10-ஆம் வகுப்பு, ITI/ Diploma, B.Sc படிப்புகளில் ஏதேனும் ஒன்றை பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

BECIL அனுபவம்:

Medical Record Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 35 வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் ஆங்கிலத்திலும் 30 வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் ஹிந்தியிலும் தட்டச்சு செய்பவராகவும், Spreadsheet போன்றவற்றில் அனுபம் உள்ளவராக இருக்க வேண்டும்.

பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 2 வருடம் முதல் 8 வருடம் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BECIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Medical Record Technician – 18 வயது முதல் 30 வயது வரை Technical Assistant/ Technician for (Anesthesia / Operation Theatre) – 25 வயது முதல் 35 வயது வரை Lab Attendant Gr. II – 18 வயது முதல் 27 வயது வரை Cashier – 21 வயது முதல் 30 வயது வரை Radiographic Technician Grade-I – 21 வயது முதல் 35 வயது வரை Senior Mechanic (A/C &R) – 18 வயது முதல் 40 வயது வரை

BECIL ஊதிய விவரம்:
  • Medical Record Technician, Cashier, Senior Mechanic (A/C &R) பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.23,550/- ஊதியம் பெறுவார்கள்.
  • Technical Assistant/ Technician for (Anesthesia / Operation Theatre), Radiographic Technician Grade-I பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.33,450/- ஊதியம் பெறுவார்கள்.
  • Lab Attendant Gr. II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.19,900/- ஊதியம் பெறுவார்கள்.
BECIL தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் General, OBC, Women, Ex Serviceman ஆக இருந்தால் ரூ.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

விண்ணப்பதாரர்கள் SC/ST/EWS/PH ஆக இருந்தால் ரூ.450/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உடைய விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு மூலம் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை 21.04.2022 இறுதி நாளுக்கு முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

BECIL Notification Link

BECIL Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!