BECIL நிறுவன வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் தேவை – ரூ.1,25,000/- ஊதியம்!

0
BECIL நிறுவன வேலைவாய்ப்பு - BE / B.Tech முடித்தவர்கள் தேவை - ரூ.1,25,000/- ஊதியம்!
BECIL நிறுவன வேலைவாய்ப்பு - BE / B.Tech முடித்தவர்கள் தேவை - ரூ.1,25,000/- ஊதியம்!
BECIL நிறுவன வேலைவாய்ப்பு – BE / B.Tech முடித்தவர்கள் தேவை – ரூ.1,25,000/- ஊதியம்!

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் Database Lead, Junior Technical Project Manager, Programmer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் நாளையுடன் (09.01.2023) முடிய உள்ளதால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

Database Lead பணிக்கு என 01 பணியிடமும், Junior Technical Project Manager பணிக்கு என 01 பணியிடமும், Programmer பணிக்கு என 03 பணியிடங்களும் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, MCA, MSc, MBA ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ஒரு மணி நேரத்திற்கு ரூ.660 ஊதியத்தில் BHEL நிறுவன வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Database Lead பணிக்கு ரூ.1.2 லட்சம் எனவும், Junior Technical Project Manager பணிக்கு ரூ.1.25 லட்சம் எனவும், Programmer பணிக்கு ரூ.1.5 லட்சம் எனவும் மாத ஊதியமாக பெறுவார்கள்.

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Test, Interview மற்றும் Interaction மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் General / OBC / EXM / Women போன்றவர்கள் ரூ.885/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் ரூ.531/- விண்ணப்ப கட்டணமாவும் செலுத்த வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரபூர்வ முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (09.01.2023) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!