பாரதிதாசன் பல்கலைக்கழக மறுதேர்வு அட்டவணை 2021 – வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து மறு தேர்விற்குரிய தேர்வு அட்டவணை ஆனது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Bharathidasan University |
பிரிவின் பெயர் | UG & PG |
தேர்வு தேதி | 15.06.2021 Onwards |
தேர்வு அட்டவணை | Download Below |
கொரோனா ஊரடங்கு :
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. முன்னதாக கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. பின்னர் பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவை குறைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தொற்றின் பரவல் குறையாததினால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது 31 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த முறை கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளற்ற ஊரடங்காக அமல்படுத்தப்பட்டுள்ளது.
BDU Revised UG & PG Time Table 2021 :
முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த வாரத்தில் இத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து அத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அப்பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அத்தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதி வெளியாகியுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் அனைத்து பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் வரும் 15.06.2021 அன்று முதல் தேர்வுகள் தொடங்கி நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணை ஆகியவற்றினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பாரதியான் அல்ல, மாறாக பாரதிதாசன் பல்கலைக்கழகம். இனியும் சரியாக சொன்னால், பாரதி தாசனார் பல்கலைக்கழகம். – துரை மணிகண்டன். M A,. M C J, M Ed. Freelance முறையில், தமிழில் பிழை திருத்தம் செய்ய விருப்பம். இசைவு இருப்பின், 7010960982 இனை அழைக்கவும். நன்றி.