பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு இல்லாத வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TN Job “FB
Group” Join Now
நிறுவனம் | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Fellow |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BDU பணியிடங்கள்:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
BDU கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post Graduation/ M.Phil/ Ph.D in Social Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BDU வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BDU ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.10,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BDU தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BDU விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.05.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.