மணக்கோலத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4 கேபிரியலா – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிய கேபிரியலா தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் மணக்கோலத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேபிரியலா பதிவு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மீடியாவில் அறிமுகமாகியவர் கேபிரியலா. இவர் சிறந்த டான்சர் என்பது அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால் சிறுவயதிலே மிகவும் மாஸ் ஆக ஆடியவர் தான் கேபிரியலா. அதன் பிறகு வெள்ளித்திரையில் எதிர்பார்க்காத விதமாக நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தில் ஹீரோயின் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து பிரபலமானார். அதில் அவர் பேச முடியாத ஒரு குழந்தையாக நடித்து இறுதியில் பேசிய அந்த காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டவர் ஆனார்.
குழந்தை பிறக்க வேண்டும் என கோவிலில் பரிகாரம் செய்யும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!
அந்த படத்துக்கு பிறகு அவர் எங்கு போனார், என்ன செய்கிறார் என்ற எந்த தகவல்களும் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடத்தில் மேலும் அதிகம் பிரபலமானவர் ஆனார். அதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு பல ஆண்டுகள் மீடியாவுக்கு இடைவெளி விட்ட கேபிரியலா சமீபத்தில் அதை குறித்து ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதாவது அவர் மிகவும் ஒல்லியாக இருப்பதாலே நிறைய பிராஜெக்ட்கள் கிடைக்காமல் போனதாக கூறியிருந்தார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆக இருக்கு கேபிரியலா அவருக்கென தனியாக யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவரது வாழ்க்கையில் நடக்கும் சில மொமெண்ட்டுகளை ஷேர் செய்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியலுக்காக போட்டுகொண்டு திருமண அலங்காரத்தில் உள்ள சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் க்யூட், அழகு, என்று பலரும் பல கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.