மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு – ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு - ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு - ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பள உயர்வு – ஜனவரி 26 ஆம் தேதிக்குள் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000த்தில் இருந்து ரூ.26,000 ஆக உயர்த்த கோரிக்கை வைத்து வந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பான முடிவெடுக்க உள்ளது.

அடிப்படை சம்பள உயர்வு:

மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை மத்திய அரசு உயர்த்தி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க உள்ளது. இந்த அறிவிப்பு சம்பள உயர்வுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 த்தில் இருந்து ரூ.26,000 ஆகவும், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காகவும் உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிகை வைத்து வருகின்றனர்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரயில் பயணிகளுக்கு அனுமதி – ஜன.10 முதல் அமல்!

இதனால் மத்திய அரசு இதற்கான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை ஜனவரி 26ம் தேதி அதாவது குடியரசு தினத்திற்கு முன் முடிவு செய்யலாம். 7வது ஊதியக்குழுவின் அறிக்கை பரிந்துரைக்கிறது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரிய அளவு அதிகரிக்க உள்ளது. ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் தானாகவே உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் பேக்டரின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் அறிவிப்பு!

இதனை 3.68 சதவீதமாக உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 அளவிற்கு உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தின் படி ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்தினால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆகிவிடும். தற்போது, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், மற்ற படிகள் தவிர்த்து 2.57 ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!