‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதிக்கு அக்காவாக ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஸ்ருதிக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி:

விஜய் டிவி சீரியல்களின் TRP ரேட்டிங் கிங்கான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிரபல சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ரசிகர்களின் பேவரைட் ஆன சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு இயக்குனர், கதைக்களம் ஒரு முக்கிய பாத்திரமாக இருந்தாலும் இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.

ஸ்ருதிகாவை தெறிக்கவிட்ட “குக் வித் கோமாளி சீசன் 3” கோமாளிகள் – கலகலப்பான ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத், வினுஷா தேவி, சுகேஷ், கண்மணி ஆகியோர் சீரியல்களுக்கு புதிய முகங்கள் தான் என்றாலும் இவர்களின் நடிப்பு மூலம் இந்த சீரியல் இன்று வரையும் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாரதியின் அக்காவாக ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்தவர் புதுமுக நடிகை ஸ்ருதி. அதாவது, சௌந்தர்யாவின் மூத்த பெண்ணாக இந்த சீரியலின் ஆரம்பத்தில் காட்டப்பட்டவர் தான் நடிகை ஸ்ருதி. ஆனால் காலப்போக்கில் இவரது கதாப்பாத்திரம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

ஆனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ஸ்ருதி ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக கூறி சில புகைப்படங்களை பதிவிட்டு, ‘எனக்கு இவ்வளவு அன்பையும், ஆசீர்வாதத்தையும் பொழிந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள். இது எங்களின் நிச்சயதார்த்த விழா. எங்களது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம். உங்கள் அனைவரின் அன்பும் ஆசியும் எங்களுக்கு வேண்டும்’ என்று பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நடிகை ஸ்ருதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here