ஸ்ருதிகாவை தெறிக்கவிட்ட “குக் வித் கோமாளி சீசன் 3” கோமாளிகள் – கலகலப்பான ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் புதிதாக களமிறங்கி இருக்கும் நடிகை ஸ்ருதிகாவை கோமாளிகள் புகழ்ந்து பேசும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகை ஸ்ருதிகா:
சின்னத்திரையில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” சீசன் 3 கடந்த வாரம் தொடங்கபட்டது. அதில் முதல் வாரத்தில் போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 2 சீசன்களில் இருந்த மணிமேகலை, சுனிதா, பாலா, சக்தி ஆகியோர் கோமாளிகளாக இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சீரியல், ரோஷினி, நடிகர் மனோ பாலா, வித்யூலேகா ஆகியோர் சமையல் செய்ய போட்டியாளர்களாக அறிமுகமானார்கள். இறுதியாக நடிகை ஸ்ருதிகா களமிறங்கினார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் பிரபல வில்லன் நடிகர் – வைரலாகும் புகைப்படம்!
அவரை பார்த்து கோமாளியாக வந்த பரத் ஜொள்ளு உடன் பேச ஸ்ருதிகா மிகவும் அழகாக இருப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தார். மேலும் அவரை பார்த்து மிக அழகாக சிரிப்பதாக சொல்ல, ஸ்ருதிகா தான் நடித்த படங்களை பற்றி பேசினார். நான் 4 படங்கள் நடித்தேன் அது அனைத்துமே தோல்வி அடைந்தது என சொல்ல, அவரின் வெளிப்படையான பேச்சு அனைவருக்கும் பிடித்தது. மேலும் அவர் நன்றாக சமைப்பார் எனவும் சொல்லி இருந்தார்.
‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் மாஸ் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
அதன் பின் கோமாளிகள் ஸ்ருதிகா அழகாக இருப்பதாக சொல்ல, அதை கேட்டு அவர் யாருமே எனக்கு அப்படி சொன்னதில்லை என சொல்கிறார். உடனே பாலா தனக்குரிய மொக்கை ஜோக்கின் படி அவரை புகழ்ந்து பேச, ஸ்ருதிகா பயங்கரமாக சிரிக்கிறார். அதை பார்த்து மற்ற போட்டியாளர்களும் சிரிக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு சரியான போட்டியாளர்கள் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.