‘பாரதி கண்ணம்மா’ வெண்பா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' வெண்பா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பா கர்ப்ப காலத்தில் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பரினா. இவர் தற்போது நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் வயிற்றில் மெஹந்தி வரைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

வில்லி வெண்பா:

தமிழக மக்களிடையே எப்பொழுதும் சின்னத்திரை சீரியல்களுக்கு வரவேற்பு அதிகம். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் TRP இல் டாப் ரேட்டிங் பெற்று அசத்துகின்றன. அந்த வகையில் பிரபலமான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற பெயரில் கொடூர வில்லியாக நடித்து வருபவர் பரினா. பாரதியையும், கண்ணம்மாவையும் திட்டம் தீட்டி பிரித்து தற்போது பாரதியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் உள்ளார். மறுபுறம் பாரதியோ ஹேமாவிற்காக, கண்ணம்மாவுடன் பழகி வருகிறார். இதனால் இவர்களை மீண்டும் பிரிப்பதற்கான வேலைகளில் வெண்பா இறங்கி உள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவின் வாழ்கை பயணம் – தொகுப்பாளினி முதல் நடிகை வரை!

இப்படி விறுவிறுப்பாக சீரியல் சென்று கொண்டு வரும் நிலையில், பரினா 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் சீரியலில் இருந்து பரினா விலக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் வெண்பா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன் என அவர் தெரிவித்து ஆச்சர்யம் அளித்தார். மறுபுறம் தனது கர்ப்பகால புகைப்படத்தை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

சாதி பிரச்சனையை தூண்டிய மீரா மிதுன் – சர்ச்சை வீடியோவை விளாசிய நெட்டிசன்கள்!

இதற்கு பலரும் நெகட்டிவ் கமெண்ட்களை செய்து வரும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வீடியோ, புகைப்படம் என அசத்தி வருகிறார். மேலும் தான் நின்று கொண்டே குழந்தை பெற்றுக் கொள்ள போவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். இதனிடையே தனது பேபி பம்ப்பில் மெஹந்தி வரைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!