‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஷினி - வைரலாகும் வீடியோ!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஷினி - வைரலாகும் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரோஷினி, தனக்கு மகளாக நடித்து வரும் ஹேமாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி

வழக்கமாக சீரியலுக்குள் அடித்து பிடித்து சண்டையிடும் நடிகர், நடிகைகள் திரைக்கு பின்னல் எப்போதும் நண்பர்களாகவே சுற்றித்திரிவது உண்டு. அதிலும் திரைக்கு பின்னால் நடிகர், நடிகைகள் செய்யும் கலாட்டாக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும். இதனை காணும் ரசிகர்கள், சீரியலில் எதிரும் புதிருமாக சண்டை போட்டுவிட்டு, இப்போது ஒன்றாக இருக்கிறார்கள் என ஆச்சரியப்படுவதும் உண்டு.

சரவணனுக்கு புதிய பைக் வாங்கி ஓட்ட கற்றுக்கொடுக்கும் சந்தியா – வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் படப்பிடிப்பு தளம் எப்போதும் கலாட்டா நிறைந்ததாகவே காணப்படும். ஏனென்றால் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சின்னத்திரைக்கு புதிய முகங்கள் தான். அதனால் திரைக்கு பின்னல் இவர்கள் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரோஷினி, பேபி லிசாவுக்கு ஒரு சூப்பரான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

திருநங்கைகளின் கஷ்டங்களை சொல்லும் நமீதா மாரிமுத்து – “பிக்பாஸ் சீசன் 2” முதல் ப்ரோமோ ரிலீஸ்!

அதாவது பேபி லிசாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ரோஷினி அவருக்கு முன் கூட்டியே வாழ்த்து சொல்லுவது போல ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஸ்வீட்டியும் உடன் இருக்கிறார். இந்த க்யூட்டான வீடியோ காட்சிகளை கண்ட ரசிகர்கள் தற்போது பேபி லிசாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!