கண்ணம்மா & லட்சுமியின் உறவு பற்றி அறியும் ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் திடீர் திருப்பம்!

0
கண்ணம்மா & லட்சுமியின் உறவு பற்றி அறியும் ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் திடீர் திருப்பம்!
கண்ணம்மா & லட்சுமியின் உறவு பற்றி அறியும் ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சமையல் அம்மாவின் உண்மையான பெயர் கண்ணம்மா என்று அறிந்துகொள்ளும் ஹேமா, அவர் தான் தன்னுடைய சொந்த அம்மாவாக இருப்பாரா என்று சந்தேகிப்பது போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கடந்த சில எபிசோடுகளாக போரடிக்கத் துவங்கி இருக்கிறது. ஏனென்றால் இந்த சீரியலில் கண்ணம்மா, பாரதி, லட்சுமியின் உறவு பற்றிய உண்மைகள் எல்லாம் ஒவ்வொன்றாக ஒவ்வொருவருக்கும் தெரிய வருகிறது. இந்த உண்மையை தெரிந்து கொண்டாலும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இதுவரைக்கும் ஒன்றாக சேருவது போல தெரியவில்லை. அதே போல அவர்களை சேர்த்து வைக்கவும் யாரும் முயற்சிக்கவில்லை.

CCRAS நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இதற்கிடையில் பாரதி, கண்ணம்மாவின் விவாகரத்து கதைக்களம் கொஞ்சமேனும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம் போல ஹேமா, பாரதியிடம் அழுது புரண்டு விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்க வைத்து விடுகிறார். மறுபக்கத்தில் வெண்பா மற்றும் ரோஹித் சம்பந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் காமெடி கலந்த வில்லத்தனத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெண்பாவின் சதியால் கண்ணம்மா லாரியில் அடிபடக்கூடிய சூழ்நிலை உருவாக ரோஹித் வந்து அவரை காப்பாற்றுகிறார். தொடர்ந்து, கண்ணம்மாவை காப்பாற்றுவதற்காக சௌந்தர்யா அவரை பெயர் சொல்லி அழைக்க ஹேமாவுக்கு ஒரு சந்தேகம் வருகிறது.

அதாவது, ஹேமாவின் அம்மா கண்ணம்மா என்று பாரதி சொன்னது நியாபகத்துக்கு வர ஒருவேளை சமையல் அம்மா தான் தனது அம்மாவாக இருக்குமா என்ற சந்தேகம் ஹேமாவுக்கு எழுகிறது. அதன்படி, இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிஸோடிலும் ‘கண்ணம்மா என்னுடைய அம்மா என்றால் லட்சுமி என்னுடைய அக்காவா. எதற்காக இந்த உண்மையை என்னிடம் இருந்து மறைத்தார்கள்’ என்று அவருக்குள் ஏகப்பட்ட கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு வரும் வார எபிசோடுகளில் விடை கிடைக்குமா, ஹேமாவுக்கு உண்மை தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பில் அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!