கண்ணம்மா வீட்டிற்கு பாரதி கிளம்ப சந்தோஷத்தில் குடும்பத்தினர், லட்சுமியின் நிலை என்ன? – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மா வீட்டிற்கு பாரதி கிளம்ப சந்தோஷத்தில் குடும்பத்தினர், லட்சுமியின் நிலை என்ன? - இன்றைய
கண்ணம்மா வீட்டிற்கு பாரதி கிளம்ப சந்தோஷத்தில் குடும்பத்தினர், லட்சுமியின் நிலை என்ன? - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மா வீட்டிற்கு பாரதி கிளம்ப சந்தோஷத்தில் குடும்பத்தினர், லட்சுமியின் நிலை என்ன? – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி நீதிமன்றத்தின் உத்தரவின் படி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். உடனே பாரதி கண்ணம்மா இந்த வீட்டில் இல்லை அவள் வீட்டிற்கு நான் போகிறேன் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சௌந்தர்யாவிடம் பேச வந்த பாரதி நீதிமன்றம் சொன்னது போல கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா சந்தோசப்பட இனிமேல் கண்ணம்மாவின் சிரிப்பு சத்தம் இந்த வீடு முழுவதும் கேட்க போகிறது என சொல்கிறார். ஆனால் பாரதி அதில் ஒரு கண்டிஷன் இருக்கிறது என சொல்கிறார். அப்போது வேணு இதுவும் நடிப்பதாக சொல்ல போறீயா என கேட்கிறார். இல்லை நான் சேர்ந்து வாழ்கிறேன் ஆனால் அவள் இந்த வீட்டிற்கு வர வேண்டாம் நான் அவள் வீட்டிற்கு போகிறேன் என சொல்கிறார்.

திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!

அதை கேட்டு சௌந்தர்யாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. பாரதி கண்ணம்மாவிடம் தகவல் சொல்லிருங்க என சொல்கிறார். நான் சொல்லாமல் இருந்தாலும் நீங்க சொல்ல தான் போறீங்க என சொல்கிறார். லட்சுமி ரோஜா பூ ஒன்றை கொண்டு வந்து நம்ம செடியில் பூத்ததாக சொல்கிறார். கண்ணம்மா நீ ஸ்கூலிற்கு கிளம்பு என சொல்ல, இவ்வளவு மழை பெய்கிறது இன்னைக்கு லீவ் போல என சொல்ல அதெல்லாம் இல்லை இன்னைக்கு ஸ்கூல் இருக்கிறது என சொல்கிறார். குமார் வர லட்சுமி ஸ்கூலிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது சௌந்தர்யா போன் செய்து பாரதி சேர்ந்து வாழ சம்மதம் சொன்னதை சொல்கிறார்.

அதுவும் உன் வீட்டிற்கு வர போகிறான் என சொல்ல கண்ணம்மா சந்தோசப்படுகிறார். அப்போது லட்சுமி என கண்ணம்மா கேட்க, சௌந்தர்யா முதலில் அவனை ஸ்கூலிற்கு அனுப்பு பாரதி இப்போது வந்துவிடுவான் என சொல்ல, சரி என கண்ணம்மா சொல்கிறார். லட்சுமி ஸ்கூலிற்கு கிளம்ப, பாரதிக்கு வெண்பா போன் செய்கிறார். அப்போது பாரதி நீ அஞ்சலிக்கு இப்படி செய்வ என நினைக்கவே இல்லை இனிமேல் என் மூஞ்சியில் முழிக்காதே என சொல்லி போனை வைக்கிறார். பின் கண்ணம்மா பூ வைத்து அழகு படுத்திக் கொள்கிறார். நான் ஏன் இப்படி செய்கிறேன் என கண்ணம்மா யோசிக்க வீட்டிற்கு விருந்தாளி வந்தால் அப்படி தான சந்தோசமாக இருக்கும் அதான் என கண்ணம்மா நினைக்கிறார் .

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

அஞ்சலி குழந்தையுடன் இருக்க பாரதி எடுத்த முடிவால் ரொம்ப சந்தோசமாக இருப்பதாக அஞ்சலி அகில் வேணு பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் சௌந்தர்யா மிகவும் சந்தோசமாக வர அஞ்சலி அம்மா செய்தது பற்றி சௌந்தர்யா பேசுகிறார். கண்ணம்மா மனதில் ஆசை இருக்கிறது. அதனால் தான் அஞ்சலி அம்மாவிடம் சொல்லி இருக்கிறார். அவள் லட்சுமிக்கு அப்பா வேண்டும் என கண்ணம்மா நினைக்கிறாள் இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்க, பாரதி கிளம்பி வருகிறார். அனைவரும் அவரை பார்த்து சந்தோசமாக இருக்கின்றனர். சௌந்தர்யா உனக்கு எதாவது தேவை என்றால் அகில்கிட்ட கொடுத்துவிடுறேன் என சொல்ல, ஏன் வீட்டிற்குள் வந்தால் உள்ளே விடமாட்டீங்களா என கேட்கிறார்.

உனக்கு 6 மாசத்திற்கு ட்ரெஸ் கொஞ்சமாக இருக்கிறது. என்னிடம் பெரிய பேக் இருக்கிறது வேண்டுமா என கேட்கிறார். எனக்கு ட்ரெஸ் வேண்டும் என்றால் நான் இங்கே வந்து எடுத்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அகில் மருத்துவமனை கூட பக்கம் தான் என சொல்ல, எல்லாரும் நான் இந்த வீட்டை விட்டு போறதை நினைத்து சந்தோசமாக இருக்கீங்க ஆனால் நான் இந்த வீட்டை விட்டு போனால் சந்தோசமாக இருப்பது ஹேமா தான் என சொல்ல, ஹேமாவிடம் என்ன சொல்வது என அஞ்சலி கேட்கிறார். ஹேமாவிடம் நான் சமையல் அம்மா வீட்டில் இருக்கிறேன் என சொல்லாதீங்க என சொல்கிறார். 8 வருடம் கழித்து நீகண்ணம்மா வீட்டில் இருக்க போற அப்போது பழசு எல்லாம் நியாபகம் வரும் அதை எல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாத அவளிடம் சண்டை போடாத என சொல்கிறார். பாரதி கிளம்ப இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!