மாப்பிள்ளை வீட்டை துரத்தி விட்ட வெண்பா, ஹேமா அம்மா யார் என கேட்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
மாப்பிள்ளை வீட்டை துரத்தி விட்ட வெண்பா, ஹேமா அம்மா யார் என கேட்கும் லட்சுமி - இன்றைய
மாப்பிள்ளை வீட்டை துரத்தி விட்ட வெண்பா, ஹேமா அம்மா யார் என கேட்கும் லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
மாப்பிள்ளை வீட்டை துரத்தி விட்ட வெண்பா, ஹேமா அம்மா யார் என கேட்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஷர்மிளா பார்த்த மாப்பிள்ளையை பார்க்க வெண்பா ஹோட்டலிற்கு செல்கிறார். அங்கே மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பது போல நடித்து மாப்பிள்ளை வீட்டை ஓட விடுகிறார். பின் ஹேமா பரிசு வாங்கியதாக சொல்ல எனக்கு அப்பா இல்லாமல் நான் எப்படி போட்டியில் கலந்து கொள்வது என லட்சுமி கேட்கிறாள்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஷர்மிளா வெண்பாவிற்கு பல இடங்களில் தேடி மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார். மாப்பிள்ளையை பார்க்க ஹோட்டலிற்கு வெண்பாவை போக சொல்கிறார். வெண்பாவும் சாந்தியும் ஷர்மிளா சொன்ன ஹோட்டலிற்கு வருகின்றனர். அப்போது ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி மாப்பிள்ளையை விரட்டி அடிக்க திட்டமிடுகிறார். உள்ளே செல்ல மாப்பிள்ளை அம்மா அப்பா உடன் இருக்கின்றனர். வெண்பா அவர்களை பார்த்ததும் தன்னுடைய நடிப்பை தொடங்குகிறார்.

TN Job “FB  Group” Join Now

வெண்பா மாப்பிள்ளை குடும்பத்தின் அருகே செல்ல அங்கே வெண்பாவை அடக்க ஒடுக்கமாக பார்த்த மாப்பிள்ளை வீட்டிற்கு மிகவும் பிடித்து போய்விடுகிறது. அப்போது வெண்பாவை அமர சொல்ல ஆனால் வேண்டாம் என வெண்பா சொல்கிறார். நீ டாக்டர் என உன் அம்மா சொன்னார் என மாப்பிள்ளையின் அம்மா கேட்க ஆமாம் டாக்டர் தான் என வெண்பா சொல்கிறார். ஒரு டாக்டராக இருந்துவிட்டு இவ்வளவு அடக்க ஒடுக்கமா என அதிர்ச்சி அடைய டாக்டர் என்பது ஒரு படிப்பு தான் என வெண்பா சொல்கிறார்.

பின் மாப்பிள்ளை வீட்டில் ஜூஸ் ஆர்டர் செய்து குடிக்கின்றனர். அப்போது வெண்பா என்ன குடிக்கிறார் என கேட்க நான் வீட்டில் இருந்தே குடிக்க எடுத்துக் கொண்டு வந்திருக்கேன் என வெண்பா சொல்கிறார். என்ன வீட்டில் தயார் செய்த ஜூஸ்ஸா என மாப்பிள்ளையின் அப்பா கேட்கிறார். அப்போது வெண்பா சரக்கு பாட்டிலை கொண்டு வந்து வைக்கிறார். அதை பார்த்து மாப்பிள்ளை வீட்டில் அதிர்ச்சி அடைய, வெண்பா பாட்டிலை திறந்து தர சொல்லி மாப்பிள்ளையை சொல்கிறார். ஆனால் மாப்பிள்ளை எனக்கு இந்த பழக்கம் இல்லை என சொல்கிறார்.

தமிழக 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அப்போது வெண்பா மாப்பிள்ளைக்கு பாட்டிலை திறக்க சொல்லி கொடுக்க மாப்பிள்ளையை குடிக்க சொல்கிறார். ஆனால் மாப்பிள்ளை வேண்டாம் என சொல்ல வெண்பா எல்லாத்தையும் குடித்துவிட்டு ரகளை செய்கிறார். மாப்பிள்ளை வீட்டில் ஓடி விடுகின்றனர். மறுபக்கம் லட்சுமி ஸ்கூலிற்கு கலர் ட்ரெஸில் கிளம்பி இருக்க அப்போது கண்ணம்மா என்ன இன்னைக்கு இந்த ட்ரெஸ் என கேட்கிறார். அப்போது பேச்சு போட்டியில் வெற்றி பெற்றதற்கு ஹேமாவிற்கு இன்று பரிசு கொடுப்பதாக சொல்ல, நீ ஏன் கலந்து கொள்ளவில்லை என கண்ணம்மா கேட்கிறார்.

அது அப்பா பற்றி பேசிய டாபிக் என சொல்ல அப்போது கண்ணம்மாவிடம் அப்பாவிற்கு என்னை மட்டும் ஏன் பிடிக்கவில்லை ஹேமாவை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார் ஆனால் என்னை ஏன் பிடிக்கவில்லை. நீ அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பின் தான் ஹேமா அம்மாவை திருமணம் செய்து கொண்டாரா, ஹேமாவின் அம்மா யார் என லட்சுமி கேட்க கண்ணம்மா என்னிடம் இப்போதைக்கு பதில் இல்லை என சொல்கிறார். அப்போது லட்சுமி அப்பாவை போல ஹேமா பற்றிய உண்மையை நானே கண்டுபிடிக்கிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் வெண்பா ஷர்மிளாவிடம் மாப்பிள்ளை வீட்டில் ஓடி விட்டதாக சொல்ல, அப்போது ஷர்மிளா நீ எதோ சரக்கு குடித்துவிட்டு அவர்களை ஓட விட்டதாக சொன்னார்களே என சொல்கிறார். அப்போது வெண்பா என்னை நம்பாமல் அவர்களை நம்புகிறாய் என கேட்க, ஏற்கனவே வந்த மாப்பிள்ளையை கூட ஆண் நண்பர்கள் இருப்பதாகவும் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி ஓட விட்டதாக சொன்னார்கள் என கேட்கிறார். நீ யார் என எனக்கு தெரியும் என ஷர்மிளா பேச வெண்பா மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!