பாரதி திட்டியதை நினைத்து கோவப்படும் கண்ணம்மா, வெண்பா போன் செய்ததால் கடுப்பான பாரதி – இன்றைய எபிசோட்!

0
பாரதி திட்டியதை நினைத்து கோவப்படும் கண்ணம்மா, வெண்பா போன் செய்ததால் கடுப்பான பாரதி - இன்றைய எபிசோட்!
பாரதி திட்டியதை நினைத்து கோவப்படும் கண்ணம்மா, வெண்பா போன் செய்ததால் கடுப்பான பாரதி - இன்றைய எபிசோட்!
பாரதி திட்டியதை நினைத்து கோவப்படும் கண்ணம்மா, வெண்பா போன் செய்ததால் கடுப்பான பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவை பாரதி திட்டியதால் அவருக்கு கோவம் வருகிறது. இப்பவே சென்று ஹேமா என் வயிற்றில் பெற்ற குழந்தை என நான் சொல்லவா என கேட்கிறார். பின் வெண்பா பாரதிக்கு போன் செய்து அழ பாரதி கோபப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா தான் ஹேமாவின் நிலைமைக்கு காரணம் என சொல்லி வெளியே போக சொல்கிறார் பாரதி. பின் கண்ணம்மா பாரதி பேசியதை நினைத்து சௌந்தர்யாவிடம் வருத்தப்படுகிறார். ஹேமா விஷயத்தில் நான் தலையிட கூடாதாம் நான் பெற்ற பெண் அவளை பார்க்க எனக்கு உரிமை இல்லையாம். இப்பவே சென்று அவரிடம் சொல்கிறேன் லட்சுமியும் ஹேமாவும் நான் பெற்ற பெண் என சொல்கிறேன் என சொல்ல வேணு அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். நான் பெற்ற மகளை அருகில் இருந்து பார்க்க விடாமல் விரட்டி அடிக்கிறார் என சொல்கிறார்.

பின் சௌந்தர்யா அதெல்லாம் விடு நீ மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதே என சொல்ல நான் ஆட்டோவில் சென்று விடுகிறேன் என சொல்கிறார். பின் லட்சுமி வேற ஏன் லேட் என கேள்வி கேட்பாள் என சொல்லிவிட்டு பாரதியின் போனை கொடுக்கிறார். இதை கொடுக்க தான் வந்தேன் என சொல்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மாவின் தவிப்பு சரி தான் என சொல்ல, கண்ணம்மா தான் உண்மையை சொல்லிருப்பாள் போல என் வேணு சொல்ல இருக்கும் பிரச்சனை பத்தாதா என சௌந்தர்யா கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் லக்ஷ்மியும் குமாரும் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாம் வெடித்துவிடுமா என லட்சுமி கேட்க தெரியலையே எப்போது வெடிக்க இருக்கிறது என கேட்கிறார். அப்போது லட்சுமி குமாரை சத்தம் போடுகிறார். பின் கண்ணம்மா வர லட்சுமி என் மீது உனக்கு அக்கறையே இல்லை இவ்வளவு லேட்டா வருகிறாய் என கேட்கிறார். பின் ஏன் லேட் என கேட்க உன் தங்கச்சி ஹேமாவிற்கு உடம்பு சரி இல்லை அதனால் தான் பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். ஹேமாவிற்கு என்ன ஆச்சு என கேட்க அப்பாவிடம் பேசும் போது மயங்கி விழுந்துட்டாள் என சொல்கிறார்.

பின் என்ன ஆச்சு என கேட்க அவள் மதியத்தில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லையாம், நீ தான ஸ்கூலில் இருந்த அவள் சாப்பிட்டளா இல்லையா என கேட்க ட்ரைவர் சாப்பாடு கொண்டு வந்தார் ஹேமா சாப்பிடாமல் யோசித்து கொண்டே இருந்தால் நான் சாப்பிட்டு விளையாட சென்று விட்டேன் அவள் சாப்பிட்டாளா என தெரியவில்லை என சொல்கிறார். கண்ணம்மா ஹேமாவை நீ தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். லட்சுமி சரி அம்மா என சொல்கிறார்.

லட்சுமி விவாகரத்து பற்றி ஹேமா கேட்டாளா அதற்கு அவர் என்ன சொன்னார் என கேட்க எதுவும் சொல்லவில்லை என கண்ணம்மா சொல்கிறார். இதெல்லாம் பெரியவங்க விஷயம் என கண்ணம்மா சொல்கிறார். மறுபக்கம் வெண்பா பாரதி பேசியதை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது பாரதிக்கு போன் செய்து அழ ஏன் அழுகிறாய் என பாரதி கேட்கிறார். நான் ஏன் அழுகிறேன் என உனக்கு தெரியாதா ஏன் பாரதி இப்படி செய்தாய் என வெண்பா அழுகிறார். நீ எதுவும் நடக்காதது போல இருக்கிறாய் நான் அதை நினைத்து அழுகிறேன் என சொல்கிறார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு அக்னிபாத் வீரர்களுக்கு வேலை – தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு!

எல்லார் முன்னாடியும் என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை என சொல்லி ஏன் அசிங்கப்படுத்தினாய் என கேட்க அதுவும் கண்ணம்மா முன்னாடி என சொல்கிறார். உனக்கும் உன் மனைவிக்கும் சந்தோசமாக இருக்குமே என சொல்ல பாரதி தேவை இல்லாமல் பேசாதே நீ அழுவது எனக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்ல, என் வேதனை உனக்கு புரியாது என வெண்பா சொல்கிறார். என் அம்மா சொல்வதை கூட நான் கேட்கவில்லை பரவாயில்லை கடைசி வரை நான் இப்படியே இருக்கிறேன் என சொல்கிறார். நான் எப்போதும் உன்னை காதலித்து கொண்டே தான் இருப்பேன் என சொல்கிறார்.

பாரதி வெண்பா பேசியதை நினைத்து கோபப்படுகிறார். மறுநாள் ஹேமா அம்மா பற்றி கேட்டதை நினைத்து பார்க்கிறார். அம்மா எங்கே இருக்காங்க சாமிகிட்ட போய்ட்டாங்களா அப்போ யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க அப்போ அம்மா இருக்காங்களா என பாரதி ஹேமா கேள்விகளை நினைத்து பார்க்கிறார். இப்பவே விவாகரத்து பற்றி தெரிந்து இத்தனை கேள்வி கேட்கிறாள் கண்ணம்மாவிற்கு தான் விவாகரத்து கொடுத்தோம் என தெரிந்தால் என்னுடன் பேசவேமாட்டாள் என சொல்கிறார். பின் ஸ்கூலிற்கு கிளம்ப வேண்டும் என ஹேமா சொல்ல பாரதி அதெல்லாம் வேண்டாம் நாம வெளியே போவோம் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!