அப்பா பற்றி லட்சுமி பேசியதை கேட்டு வருத்தப்படும் கண்ணம்மா, சாரதி தான் மாப்பிள்ளை என சொன்ன ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

0
அப்பா பற்றி லட்சுமி பேசியதை கேட்டு வருத்தப்படும் கண்ணம்மா, சாரதி தான் மாப்பிள்ளை என சொன்ன ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
அப்பா பற்றி லட்சுமி பேசியதை கேட்டு வருத்தப்படும் கண்ணம்மா, சாரதி தான் மாப்பிள்ளை என சொன்ன ஷர்மிளா - இன்றைய எபிசோட்!
அப்பா பற்றி லட்சுமி பேசியதை கேட்டு வருத்தப்படும் கண்ணம்மா, சாரதி தான் மாப்பிள்ளை என சொன்ன ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா லட்சுமி பேச்சு போட்டியில் என்ன பேசி இருப்பாய் என கேட்க லட்சுமி அப்பா பற்றி மனதில் இருக்கும் எல்லாத்தையும் பேசுகிறார். மறுபக்கம் சாரதி தான் ஷர்மிளா பார்த்த மாப்பிள்ளை என தெரிந்து வெண்பா கடுப்பாகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ஹேமா பரிசு வாங்கியதை நினைத்து சந்தோசப்பட அப்போது லட்சுமி நானும் நன்றாக பேசி இருப்பேன் என சொல்கிறார். அப்போது லக்ஷ்மியை கண்ணம்மா என்ன பேசிருப்பாய் என கேட்க லட்சுமி பேச ஆரம்பிக்கிறார். என்னுடைய அப்பா தான் டாக்டர் பாரதி அவர் பெரிய இதய டாக்டர். அவர் பலருக்கு இலவசமாக சிகிச்சை செய்வர் சில நாட்களுக்கு முன் கூட சக்தி என்ற குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். அவர் என்னுடன் பொருள்காட்சி வந்திருக்கிறார். அப்போது நான் தண்ணீரில் விழுந்துவிட்டேன்.

TN Job “FB  Group” Join Now

அப்போது அவர் தான் என்னை காப்பாற்றினார். எனக்கு கணக்கு சொல்லி கொடுப்பார். கடைக்கு அழைத்து சென்று கேட்டது எல்லாம் வாங்கி கொடுப்பார். என்னை அவர் ரவுடி என கூப்பிடுவார் எனக்கு அது மிகவும் பிடிக்கும் ஆனால் நான் அவரை அப்பா என கூப்பிட்டதே இல்லை. அவரை இதுவரை டாக்டர் அங்கிள் என தான் கூப்பிட்டேன். அவர் தான் அப்பா என சில நாட்களுக்கு முன் தான் எனக்கு தெரியும். அதனால் டாக்டர் அப்பா என கூப்பிடுகிறேன். அவர் கையை பிடித்து கொண்டு நடக்க வேண்டும் என ஆசை ஆனால் அவர் எங்களை விட்டு பிரிய போகிறார் என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார்.

லட்சுமி பேசியதை கேட்டு கண்ணம்மா வருத்தப்பட்டு கட்டியணைத்து அழுகிறார். மறுபக்கம் வக்கீல் பாரதியை சந்திக்க வருகிறார். பாரதிக்கு இன்னும் 4 நாட்களில் வழக்கு விசாரணைக்கு வருவதாக சொல்ல கண்டிப்பாக விவாகரத்து கிடைத்துவிடுமா என கேட்கிறார். அப்போது ஹேமா அதை கேட்டு விட யாருக்கு விவாகரத்து என குழப்பமடைகிறார். பின் வெண்பா தன்னுடைய நண்பர் வருவதால் சாந்தியை விதவிதமாக சமைக்க சொல்கிறார். ஷர்மிளா மாப்பிள்ளை வருவதால் சமைக்க சொல்கிறார்.

ராதிகாவிற்கு எப்படி அனைத்து உண்மைகளும் தெரியவந்தது ? வசமாய் சிக்கிக்கொண்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!

அப்போது சாரதி வர வெண்பா அவரை சென்று அழைத்து வருகிறார். ஷர்மிளா அவரை பார்த்து இது தான் நான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அன்னைக்கு வண்டி பழுதாகிவிட்டது அதான் வர நேரமாகிவிட்டது என சொல்ல, ஷர்மிளாவிற்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது. சாரதி வெண்பாவை வெளியே கூட்டி செல்கிறேன் என சொல்ல, அப்போது ஷர்மிளா கண்டிப்பாக கூட்டிக் கொண்டு போகலாம் ஆனால் என் மகளிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here