பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
பிறந்தநாள் விழாவிற்கு பாரதி & வெண்பாவை அழைத்த கண்ணம்மா, ரகசியம் பற்றி குழப்பத்தில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதியிடம் என்ன ரகசியம் சொல்ல போகிறார் என தெரியாமல் சௌந்தர்யாவும் வேணுவும் குழப்பத்தில் இருக்கின்றனர். பின் கண்ணம்மா மருத்துவமனைக்கு சென்று பாரதி மற்றும் வெண்பாவை பிறந்தநாளுக்கு அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா என்ன ரகசியத்தை வெளியே சொல்ல போகிறார் என தெரியாமல் சௌந்தர்யாவும் வேணுவும் குழப்பத்தில் இருக்கிறார். கண்ணம்மாவிடம் அப்படி என்ன ரகசியம் சொல்ல போகிறாள் என சௌந்தர்யா கேட்க, ஒருவேளை ஹேமா பற்றி சொல்ல போகிறாளோ என நினைக்கிறார். ஆனால் இத்தனை நாள் சொல்லாமல் இப்போது ஏன் சொல்ல வேண்டும் என சௌந்தர்யா கேட்க, அப்படி எல்லாம் சொன்னால் பெரிய பிரச்சனை ஆகும் அதனால் கண்ணம்மா சொல்லமாட்டாள் என வேணு சொல்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் இருக்கும் ஒரே ரகசியம் அது தான் என சௌந்தர்யா சொல்கிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

கண்ணம்மா சொல்ல போகிறாள் என்றால் இன்று பிறந்தநாளில் பெரிய பிரச்சனை இருக்கிறது என வேணு சொல்கிறார். மறுபக்கம் வெண்பா பாரதியிடம் பேசிவிட்டு வெளியே வர அங்கே கண்ணம்மா நிற்கிறார். அவர் மனதில் என்ன கூட வாழும் பொண்டாட்டி போல அடிக்கடி இங்கே வருகிறார் என வெண்பா நினைக்க கண்ணம்மா அப்படியே கேட்டுவிடுகிறார். என்ன தாலி கட்டிய பொண்டாடி மாதிரி அடிக்கடி வருகிறாய் என கண்ணம்மா கேட்க, நான் அவருடன் வேலை பார்க்கிறேன் பாரதியின் தோழி என சொல்ல, அப்போ அது போல நடந்துகொள் என கண்ணம்மா சொல்கிறார். உள்ளே வராதே புருஷன் பொண்டாட்டிக்கு இடையே 1000 பேசுவோம் அதெல்லாம் கேட்காதே என சொல்கிறார்.

பின் கண்ணம்மா டாக்டரிடம் போக நீ எதற்கு இங்கே வந்தாய் என டாக்டர் கோபப்படுகிறார். எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் அதான் ஆசிர்வாதம் வாங்கிட்டு போகலாம் என வந்தேன் என சொல்ல, உன்னிடம் பேச எதுவும் இல்லை என சொல்ல, என்னிடம் இருக்கிறது என்னுடைய பிறந்தால் வாழ்த்து இங்கே சொல்ல வேண்டாம் வீட்டிற்கு வந்து சொல்கிறீர்களா என கேட்கிறார். நீ எல்லாம் பிறந்ததை நினைத்து வெட்கப்பட வேண்டும் என பாரதி சொல்ல, நான் ஏன் வெட்க பட வேண்டும் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் அந்த வெண்பா உங்களிடம் பேசுகிறாளே அவளுடன் பழக நீங்க தான் வெட்கப்பட வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார்.

கண்ணம்மா வினுஷா தேவியை பின்னுக்கு தள்ளிய சுந்தரி சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி என்னை உங்க வீட்டிற்கு வரவழைத்து அசிங்கப்படுத்த தான வர சொல்கிறாய் என கேட்க, இல்லை என்னிடம் ஒரு ரகசியம் இருக்கிறது என கேட்கிறார். அப்படி எதுவும் இல்லை என சொல்ல, உங்க வாழ்க்கை பற்றிய ரகசியம் இத்தனை வருடமாக என் மனதில் போட்டு கஷ்டப்பட்ட ரகசியம் என சொல்ல போறேன் என பாரதி சொல்ல, இப்பவே சொல்லு என பாரதி சொல்கிறார். ஆனால் கண்ணம்மா எல்லா ரகசியத்திற்கும் ஒரு விலை இருக்கிறது அதனால் நீங்க கண்டிப்பாக வர வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். பின் வெண்பாவிடம் எல்லாம் கேட்டுச்சா என கேட்கிறார். எப்படியும் உன் நண்பர் சொல்வார் இருந்தாலும் நானும் சொல்கிறேன் என சொல்லி கண்ணம்மா நீயும் என்னுடைய பிறந்தநாளுக்கு வா என சொல்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் லக்ஷ்மியின் அப்பா யார் என்ற உண்மையை சொல்ல போகிறேன் என கண்ணம்மா சொல்கிறார். வெண்பா வந்து பாரதியிடம் என்ன சொன்னால் அவ என கேட்க பிறந்தநாள் விழாவிற்கு நீ போக வேண்டும் அப்போது தான் அவ அசிங்கப்படுவதை நீ பார்க்க முடியும் என சொல்ல, இல்லை நான் சொல்வது போல நீ செய் அவ எப்படி பயப்படுகிறாள் என பாரு என்று சொல்லி திட்டம் ஒன்றை சொல்கிறார். பின் வெண்பா என்னையவே வம்பிழுக்கிறியா உன் புருஷனையே உனக்கு எதிராக மாற்றுகிறேன் என நினைக்கிறார்.

பின் சௌந்தர்யா வேணு கிளம்பி இருக்க அகில் அஞ்சலியும் கிளம்பி வருகிறார்கள். ஹேமாவை கூட்டிக் கொண்டு பாரதி வெளியே சென்றிருப்பதாக சொல்ல, ஒருவேளை ஹேமாவை கூட்டிக் கொண்டு ஹைதராபாத் சென்று விட்டானா என கேட்கிறார். நம்மளிடம் சொல்லாமல் எதுவும் செய்யமாட்டான் என சொல்ல, நாம கண்ணம்மா வீட்டிற்கு போவோம் எப்படியும் பாரதி வருவான் என சௌந்தர்யா நினைக்க, அஞ்சலி குழந்தையை தூக்கிக் கொண்டு அனைவரும் கிளம்புகின்றனர். பின் கண்ணம்மா அவர் வருவாரா என நினைத்து பதட்டத்தில் இருக்கிறார். வடிவு மற்றும் சண்முகம் கண்ணம்மாவிற்கு ஆறுதல் சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here