பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!

0
பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!
பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!
பாரதியிடம் தனது அப்பா பற்றி கேட்ட லட்சுமி, உண்மையை சொல்வாரா? இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு பாரதி வர வேண்டும் என சொல்ல, ஆனால் பாரதி முடியவே முடியாது என சொல்கிறார். பின் லட்சுமி பாரதிக்கு போன் செய்து என்னுடைய அப்பா யார் என்பது உங்களுக்கு தெரியுமாம் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மா பாரதியிடம் வந்து என் பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என கேட்கிறார். ஆனால் உன்னுடைய திட்டம் எல்லாம் தெரியும் நான் வந்ததும் இது தான் என்னுடைய கணவர் என அனைவரிடம் சொல்வாய் என சொல்கிறார். நான் அப்படி எல்லாம் சொல்லமாட்டேன் லட்சுமி அப்பாவை நினைத்து மிகவும் கனவுடன் இருக்கிறாள் அவளுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என கண்ணம்மா சொல்ல, அந்த சிறு குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய் என பாரதி கேட்கிறார். என்னுடைய பிறந்தநாளில் முக்கியமான விஷயம் சொல்ல போகிறேன் என கண்ணம்மா சொல்ல, உன் திட்டம் எல்லாம் தெரியும் நான் வர போவதில்லை என பாரதி உறுதியாக சொல்கிறார்.

தமிழகத்தில் இன்று (பிப். 12) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மறுபக்கம் மாயாண்டி மிரட்டுவதை நினைத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்க சாந்தி வந்து என்ன செய்ய போறீங்க என கேட்கிறார். அப்போது மாயாண்டி ஆட்களுடன் வந்து வெண்பாவிடம் பணம் கேட்கிறார், உடனே வெண்பா சாந்தியை கொண்டு வந்து கொடுக்க சொல்கிறார். மறுபக்கம் பாரதி மருத்துவமனையில் இருக்க லட்சுமி கண்ணம்மா போனில் இருந்து போன் செய்கிறார். அப்போது பாரதி எடுக்க உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என லட்சுமி சொல்கிறார். கேளு என பாரதி சொல்ல, உங்களுக்கு என் அப்பா யார் என்பது தெரியும் என வடிவு ஆன்டி சொன்னார், நீங்க என் அப்பாவை பார்த்து இருக்கீங்களா அவங்க எப்படி இருப்பாங்க அவர் எங்கே இருக்கிறார் என கேட்கிறார்.

தமிழகத்தில் பிப்.19ம் தேதி அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!

பாரதி என்ன சொல்வது என தெரியாமல் போனில் சத்தம் கேட்காதது போல நடித்துவிட்டு போனை வைக்கிறார். பின் லட்சுமி மீண்டும் போன் செய்ய அவர் போனை கட் செய்கிறார். சிறு குழந்தை மனதில் எப்படி நஞ்சை விதைக்கிறார் என நினைத்து கோபப்படுகிறார். பின் ஹேமா சௌந்தர்யாவிடம் பேசிக் கொண்டிருக்க லட்சுமி போன் செய்கிறார். லட்சுமி ஹேமாவிடம் என் அப்பா பற்றி உன் அப்பாவிற்கு தெரியுமாம், அவர் இருந்தா போனை கொடு என சொல்கிறார். ஹேமா அவர் இன்னும் வரவில்லை வந்ததும் நான் கேட்டு சொல்கிறேன் என சொல்கிறார்.

பின் பாரதி வர அவரிடம் ஹேமா லட்சுமி கேட்க சொன்னதாக கேட்கிறார். ஆனால் பாரதி பதில் சொல்லாமல் ஹேமாவிற்கு பிடித்த பொருள் வாங்கி வைத்திருப்பதாக சொல்லி அவரை போக வைக்கிறார். பின் ஒரு குழந்தையிடம் எப்படி பொய் சொல்ல மனம் வந்தது என சொல்ல சௌந்தர்யா அப்போ நீ உண்மையை சொல்லு என சொல்கிறார். அந்த வருண் தான் லக்ஷ்மியின் அப்பா அதை சொல்லவா என சொல்லிவிட்டு கிளம்ப சௌந்தர்யா பாரதி நடந்து கொள்வதை நினைத்து வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!