
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய வில்லி வெண்பா? கலர்ஸ் தமிழ் சேனலில் என்ட்ரி! ப்ரோமோ ரிலீஸ்!
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை ஃபரீனா தற்போது கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலில் புதிதாக என்ட்ரியாக இருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது அதிக உற்சாகம் அடைந்துள்ளனர்.
அபி டெய்லர்:
ஃபரீனா முதலில் தொகுப்பாளராக பல சேனல்களிலும் பணியாற்றி வந்துள்ளார். இவரது திறமையை கண்டு பலரும் பாராட்டி வந்த நிலையில், பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் வெளிநாட்டில் இருந்து வந்த பாரதியின் தோழியாக சாதாரண வேடமாக இருந்த நிலையில், போக போக அதிரடி வில்லியாக அவதாரம் எடுத்தார். இவரின் நடிப்பினால் வெண்பா கதாபாத்திரம் பெரிய அளவில் ரீச் ஆகியது.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்திற்கு இதுதான் காரணமா? ஷாக்கான ரசிகர்கள்!
கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதில், மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இவர்களின் திருமணம் முடிந்து சீரியல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களின் ஜோடிக்காகவே அபி டெய்லர் சீரியல் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது அபி டெய்லர் சீரியலில் அதிரடி மாற்றங்கள் வரவுள்ளது. இது தற்போது வெளியான ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை வேடத்தில் இனி புது நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதில், அபி சில நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார் என்றும், அதற்கு பதிலாக அவரது தோழி பவானி அவருடைய அனைத்து பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு செல்கிறார். அபியின் தோழி பவானியாக வந்து இறங்குவது தான் ஃபரீனா. இவர் புது என்ட்ரியாக வந்துள்ளதால் அபி டெய்லர் சீரியல் இனி அதிக விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபரீனாவின் ரசிகர்கள் இவரது புது சீரியல் குறித்து அதிக உற்சாகம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி இதனால் பரினா பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக உள்ளதாகவும் சில வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளது.