“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் 2வது முறை கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் 2வது முறை கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கடந்த வார எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாரதிக்கு விவாகரத்து கிடைக்காமல் கண்ணம்மா உடன் 6 மாதம் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார். மாயாண்டியுடன் சேர்ந்து வெண்பா அஞ்சலியை கொல்ல திட்டமிடுகிறார். கடத்தப்பட்ட அஞ்சலியை கண்ணம்மா காப்பாற்ற அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அதனால் வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். சௌந்தர்யா சேர்ந்து வாழ்வது பற்றி கண்ணம்மாவிடம் கேட்க உங்க பையன் தான் முடிவெடுக்க வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார்.

ஆன்மீக பயணத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சாய் காயத்ரி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இன்றைய எபிசோடில், அஞ்சலி வெண்பா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்கிறார். அதனால் பாரதி மனம் மாறி கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ இருக்கிறார். ஆனால் இந்த வீட்டில் இல்லாமல் நான் அவளது வீட்டில் சென்று இருக்க போகிறேன் என சொல்கிறார். இந்நிலையில் அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோவில் பாரதி மட்டும் தான் கண்ணம்மா வீட்டிற்கு செல்வது போல காட்டப்பட்டுள்ளது. கண்ணம்மா வீட்டில் லட்சுமியிடம் கண்ணம்மா உண்மையை சொல்வாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

நாகசைதன்யா மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு இடையே காதலா? சமூக வலைதளங்களில் பரவும் ஷாக் தகவல்!

தெலுங்கு பாரதி கண்ணம்மாவில் குழந்தைகள் பாட்டியுடன் இருப்பது போல காட்டப்பட்டது. அதனால் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போலவும் பாரதி வயிற்றில் காது வைத்து கேட்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. வழக்கம் போல அது கனவு தான் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்வதால் கண்ணம்மா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது போல சௌந்தர்யா நினைத்து சந்தோசப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!