‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அடுத்த வார ப்ரோமோ!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் திருப்பங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியலில், சௌந்தர்யா இரண்டு குழந்தைகளையும் ஹோட்டலுக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார். அத்துடன் கடந்த வார எபிசோட் முடிவடைகிறது. இந்த வாரம் வெண்பா, துர்காவை அடைந்து வைத்திருக்கும் இடத்திற்கு செல்கிறார். அங்கே துர்காவை காணவில்லை. இதனால் மிகவும் பதட்டமடைந்து, துர்கா எல்லா உண்மையையும் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று குழப்பத்தில் உள்ளார்.
அனுவை கொலை செய்து விடும் அர்ஜுன் – பலவித ட்விஸ்டுகளுடன் “ரோஜா” சீரியல் ப்ரோமோ!
உன்னால தான் தப்பிக்க முடியுமா, என்னாலையும் தப்பிக்க முடியும் என துர்கா சொல்வது போல வெண்பா காதில் கேட்கிறது. ஏற்கனவே பாரதி அடிக்கடி கண்ணம்மா வீட்டிற்கு வேற போகிறான். இப்போது இந்த பிரச்சனை வேற வருது என்று குழம்பி கொண்டிருக்கிறார். ஒரு வேலை உண்மையை சொல்ல துர்கா பாரதி வீட்டிற்கு போயிருப்பானோ என்று நினைத்து நேராக பாரதி வீட்டிற்கு போறாங்க.
அங்க எதுவும் நடக்காமல் அமைதியாக இருப்பதை நினைத்து நிம்மதி அடைகிறார். வெண்பா, பாரதியை கூப்பிட அங்க அஞ்சலி வராங்க, அவரிடம் பாரதி எங்கே என்று கேட்க அவர் இங்க இல்ல ஹாஸ்பிடல் போயிருக்காரு, நீ எதற்கு நைட் நேரத்துல இங்க வர என்று கேட்க, இதெல்லாம் அத்தைக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என எச்சரித்து அனுப்புகிறார். அப்போது வேணு அங்க வந்து அத்தை எங்கே என்று கேள்வி கேட்க அவர் கண்ணம்மா வீட்டிற்கு போயிருக்காங்க என்று அஞ்சலி சொல்ல, ஓ எல்லாரும் ஒண்ணா செந்துட்டீங்களா அப்போ என்னோட நிலைமை என்ன ஆகும் என்று நினைத்து கொள்கிறார்.
TN Job “FB
Group” Join Now
வெண்பா அந்த வீட்டில் இருந்து வரும் சௌந்தர்யா, லட்சுமி, ஹேமா என அனைவரும் சந்தோசமா இருக்கிறதா பாக்குறா, அப்போ எல்லாரும் ஒண்ணா சேந்துட்டா நான் என்ன பண்றது என்று நினைத்து பாரதிக்கு போன் செய்கிறார். அப்போது பாரதியிடம் ஒண்ணுக்கு இரண்டா பேசி அவரின் மனசை மாற்றுகிறார். ஹேமாவிற்கு உடம்பு சரி இல்லை என்று கண்ணம்மா வீட்டில் விட்ட ஆனா அவளை கூட்டிட்டு உன் அம்மா நல்ல ஊர் சுத்துறாங்களே அதற்கு என்ன அர்த்தம் என ஹேமா பாரதியிடம் கேட்கிறார்.
மற்றொரு பக்கம் துர்கா வெண்பாவை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்க வெண்பா இல்லாமல் சாந்தி மட்டும் தனியாக இருக்கிறார். சாந்தி துர்காவிடம் உனக்கு எப்படி இந்த வீட்டோட அட்ட்ரஸ் தெரியும் என்று கேள்வி கேட்க வெண்பாவை அடைந்து வைத்தது முதல் அனைத்து உண்மைகளையும் துர்கா சொல்கிறார். இவளோவும் வெண்பாவ பண்ணாங்க என்று சாந்தி அதிர்ச்சி அடைகிறார். சாந்தி மனது மாறி வெண்பாவிற்கு எதிராக மாறுவாரா என்பது அடுத்து வரும் ட்விஸ்ட்டாக உள்ளது.