
“பாரதி கண்ணம்மா” சீரியலில் உயிர் பிழைத்த அகில், அஞ்சலி – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்! ரசிகர்கள் குஷி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அஞ்சலி உடல்நிலை மோசமாக இருக்க, அகில் ரௌடிகளால் தாக்கப்படுகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதை தெரிந்து கொண்ட வெண்பா அஞ்சலியை கடத்த சொல்கிறார். மாயாண்டி அஞ்சலியை கடத்தி அடைத்து வைக்க அஞ்சலிக்கு பிரசவ வலி வருகிறது. அகில், அஞ்சலியை காணாமல் எல்லா இடங்களிலும் தேடி அலைகிறார். பின் கண்ணம்மாவை பார்த்து அவர் அஞ்சலியை காணவில்லை என சொல்ல அஞ்சலி உயிருக்கு ஆபத்து என சொல்கிறார். உடனே கண்ணம்மா அகில் சேர்ந்து அஞ்சலியை தேடுகின்றனர்.
விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியல் நடிகையின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் வாழ்த்து!
அஞ்சலி போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. உடனே அஞ்சலி கட்டிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். அங்கே இருந்த ரௌடிகள் அகிலை அடித்து விட, அவர் மயக்கம் அடைகிறார். அஞ்சலி பிரசவ வலியால் துடிக்க கண்ணம்மா வைத்தியர் அம்மாவுடன் இணைந்து பிரசவம் பார்க்கிறார். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தையை முத்தமிட்டு அஞ்சலி மயக்கமடைகிறார். கண்ணம்மா அஞ்சலியை எழுப்ப அவர் எந்திரிக்கவே இல்லை.
‘ராஜா ராணி 2’ சித்து, ஷ்ரேயாவின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை – அவரே வெளியிட்ட வீடியோ!
அதனால் அவர் அகிலை எழுப்ப அவரும் எந்திரிக்கவில்லை. வைத்தியர் பாட்டி அஞ்சலியை பார்த்துவிட்டு அவர் நாடி துடிப்பு மோசமாக இருக்கிறது. அதனால் உடனே மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என சொல்ல, கண்ணம்மா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில் அகில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுகேஷ் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நாங்கள் பிழைத்து விட்டோம் என பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்களுக்கு நிம்மதியாக இருக்கிறது.