தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் படியில் நின்று பயணம் செய்வதை தடுக்கும் விதமாக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து தற்போது அனைத்து நிறுவனங்களும் இயக்கத்தில் உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து மக்களும் தங்களது பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அதே பேருந்துகளிலே சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் போது மாணவர்கள் பெரும்பாலானோர் படியில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 26% ஆக அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
காலை மற்றும் மாலை என இரண்டு நேரங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளின் படியில் நின்று பயணம் செய்வதால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் அனைத்து பேருந்துகளுமே முற்றிலும் கூட்டமாக வருவதால் வேறு வழி இல்லாமல் மாணவர்கள் படியில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி வழங்குவது தொடர்பாக மத்திய நீதி மய்ய மாணவரணி மாநில செயலாளர் ராகேஷ் ஷம்ஷேர் தமிழக அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களும் பேருந்தின் படியிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை காக்கும் விதமாக தமிழக அரசு மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கு சிறப்பு பேருந்து வசதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு தனிப்பேருந்து வசதி வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு மத்திய நீதி மய்யம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.