தனது இரு குழந்தைகளுடன் இணைந்த கண்ணம்மா – சீரியலில் இனி வரும் எபிசோட்!
பாரதி கண்ணம்மா சீரியல் கணவன் மனைவியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹேமா லக்ஷ்மியும் அக்கா தங்கச்சி போல உணர்ந்து பழகி வரும் இந்த நேரத்தில் கண்ணம்மா தன்னுடைய இரு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவியில் 700 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. குடும்ப சீரியல்கள் என்றாலே அதில் வழக்கமான கதை தான் இருக்கும். ஆனால் இந்த சீரியலில் அப்படி இல்லாமல் கணவர் மனைவி உறவு பற்றியும், அப்பா அம்மா உறவு எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் கதை கொண்டு செல்லப்படுகிறது. அதனால் தான் சீரியல் TRPயில் ஹிட் அடித்து இருக்கிறது. இந்த சீரியல் கதை எப்போது அடுத்தகட்டத்துக்கு செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், குழந்தைகள் மூலமாக அது நடைபெற இருக்கிறது.
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் சொல்லும் ஹேமா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
லக்ஷ்மிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை தெரிந்துள்ளது. அதனால் பாரதி மற்றும் அவரது குடும்பத்துடன் நெருக்கமாக பழகி வருகிறார். அடுத்ததாக ஹேமா தன்னுடைய அப்பாவை பார்த்துக் கொள்ள ஒரு ஆள் வேண்டும் என நினைக்க, தனது அப்பாவிற்கு சமையல் அம்மா தான் பொருத்தமாக இருப்பார் என நினைக்கிறார். அதனால் கதைக்களம் சூடு பிடித்து இருக்கிறது. கண்ணம்மா இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாலும் பாரதி அதற்கு சம்மதம் தெரிவிக்கப் போவதில்லை.
இப்படியே சில எபிசோடுகள் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக லட்சுமி ஹேமா யார் என நினைக்காமல் அவரை தங்கச்சியாக பார்க்க, அதனால் சௌந்தர்யா மிகவும் சந்தோசப்படுகிறார். கண்ணம்மாவிடமும் அது பற்றி சொல்ல, கண்ணம்மா இருவரையும் நினைத்து சந்தோசப்படுகிறார். இந்நிலையில் கண்ணம்மா தனது இரு குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஏதோ திருவிழா போல அடுத்த எபிசோடுகளில் வரும் என நினைக்கின்றனர்.