பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் சொல்லும் ஹேமா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

0
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் சொல்லும் ஹேமா - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் சொல்லும் ஹேமா - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
பாரதியை திருமணம் செய்து கொள்ளுமாறு கண்ணம்மாவிடம் சொல்லும் ஹேமா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமி தன் அப்பா யார் என்பதை கண்டுபிடித்திருக்க, மறுபக்கத்தில் ஹேமா தனக்கே தெரியாமல் அப்பா மற்றும் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க கண்ணம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

ஒவ்வொரு நாளும் பலவிதமான திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் டிவி சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒரு சில வாரங்களாக பார்வையாளார்களை இழந்து வந்தது. ஏனென்றால் வழக்கம் போல பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, வெண்பாவின் வில்லத்தனம் என்று இந்த சீரியல் சற்று போரடிக்கத் துவங்கியது. இது இப்படியே போனால் எங்கு முடியுமோ என்று ரசிகர்கள் ஏறக்குறைய புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பாரதியை திருமணம் செய்து கொள்ளும் கண்ணம்மா?

இந்த இடத்தில் தான் இயக்குனர் பெரிய ட்விஸ்டையே வைத்திருக்கிறார். அதாவது, 10 ஆண்டுகளாக அப்பாவுக்காக ஏங்கி, அவரை தேடி அலைந்து கொண்டிருந்த லட்சுமிக்கு அவரது அப்பா பாரதி என்ற உண்மை தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து அப்பா, மகள் பாசப்போராட்டங்கள் சில எபிசோடுகளாக நீடித்தது. இதற்கு அடுத்து மீண்டும் அரைத்த மாவையே அரைக்க ஆரம்பிப்பார்களோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த திருப்பமாக ஹேமா, பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணம் குறித்து பேசுகிறார்.

லட்சுமியின் அப்பா இனி வரப்போவதில்லை என்பதால் நீங்கள் என் அப்பாவை திருமணம் செய்து கொள்ளுங்கள். நானும் என் அப்பாவும், லட்சுமி, நீங்கள் என எல்லாரும் ஒன்றாக ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம் என்று கண்ணம்மாவிடம் கேட்கிறார் ஹேமா. ஆனால், நான் பெத்த பிள்ளையே எனக்கும் என் புருஷனுக்கும் கல்யாணம் செய்து வைக்க பேசுகிறது என்று சௌந்தர்யா, வடிவுவிடம் சொல்லி வருத்தப்படுகிறார் கண்ணம்மா. எப்படி இருந்தாலும் இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் அல்லவா. அதனால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு அடுத்த திரை விருந்து ரெடியாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!