பாரதி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட லட்சுமி & ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வருபவை!

0
பாரதி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட லட்சுமி & ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வருபவை!
பாரதி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட லட்சுமி & ஹேமா - 'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வருபவை!
பாரதி பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட லட்சுமி & ஹேமா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவியில் தற்போது அதிக அளவில் திருப்பங்கள் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது, பாரதி கண்ணம்மா சீரியல். தற்போது யாருமே எதிர்பார்க்காத வண்ணமாக பாரதி பற்றிய உண்மைகளை லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் அறிந்து கொள்கின்றனர். லட்சுமி தனது அப்பா பற்றி கண்ணம்மாவிடமும் கூறி விடுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது அவ்வளவாக திருப்பங்கள் இல்லாமல் கடனே என்று ஒளிபரப்பாகி வருகிறது, பாரதி கண்ணம்மா சீரியல். ஆரம்பத்தில் பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருக்கும் வெண்பா, வெண்பாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் துர்கா என்று பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்தது. அதன்படி, தற்போது வெண்பாவிற்கு அவரது அம்மா ஷர்மிளா மாப்பிள்ளை பார்த்து வருகிறார். தனக்கு பார்த்த மாப்பிள்ளை தான் என்று தெரியாமல் வெண்பா அவரை வீட்டிற்கு அழைத்து வந்து தனது அம்மாவிற்கு இன்ட்ரோவும் கொடுக்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறிய முல்லை & கதிர், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு – பல ட்விஸ்டுகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்!

பின்னர், உண்மைகளை அறிந்து தன்னை தானே நொந்து கொள்கிறார். இப்படியாகவே கதை சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இதில் மாற்றமாக, லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பாரதி பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்கின்றனர். பாரதி தான் தனது உண்மையான அப்பா என்று தெரிந்து கொள்ளும் லட்சுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். அதனை தனது அம்மா கண்ணம்மாவிடமும் பகிர்ந்து கொள்கிறார். லட்சுமி தனது அம்மாவிடம் பாரதி தான் எனது அப்பா என்று தனக்கு தெரியும் என்றும் ஆனால் தன்னால் தான் அதனை வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்.

Exams Daily Mobile App Download

இதனை கேட்டு விட்டு கண்ணம்மா மிகவும் மனம் நொந்து போய் விடுகிறார். பின்னர், லக்ஷ்மியை சமாதானம் செய்து விடுகிறார். ஹேமாவிற்கும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களது அப்பா & அம்மா என்று தெரிந்து கொள்கிறார். அதனால் மகிழ்ச்சி அடைந்த ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் கண்ணம்மாவை பாரதியுடன் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகின்றனர். இதனால் மீண்டும் பாரதி கண்ணம்மா எபிசோட் பல திருப்பங்களுடன் காட்சி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!