மீண்டும் பாரதியுடன் குடும்பமாக இணைந்த கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் பாரதியுடன் குடும்பமாக இணைந்த கண்ணம்மா - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் பாரதியுடன் குடும்பமாக இணைந்த கண்ணம்மா - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் பாரதியுடன் குடும்பமாக இணைந்த கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது கண்ணம்மாவின் பிறந்த நாள் விழாவில் பாரதி, கண்ணம்மா, அவர்களுடைய 2 குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த முக்கியமான தொடர்களில் ஒன்று விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’. இத்தொடர் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதால் இதற்கு ஆடியன்ஸ் அதிகம். அதுவும் சமீப காலமாக இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில அதிரடியான சம்பவங்களும் அரங்கேறி ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறது. அந்த வகையில் கண்ணம்மாவுடன் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று நிர்பந்தப்பட்டிருந்த பாரதி, ஒரு சில சண்டைகளுக்கு பின்னர் அவரை விட்டு பிரிந்து வந்து விட்டார்.

சன் டிவி “பூவே உனக்காக” சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி ராதிகா ப்ரீத்தி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொள்ள நினைத்த வெண்பா, சில நாடகங்களை நடத்தி மீண்டும் பாரதியை தன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறார். இதற்கிடையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு லட்சுமியின் அப்பா பாரதி என்கிற உண்மையை உலகிற்கு சொல்லப்போவதாக சபதமிட்டிருக்கிறார் கண்ணம்மா. அந்த வகையில் கண்ணம்மா அழைத்ததன் பேரில் சௌந்தர்யா மற்றும் ஹேமா இருவரும் கண்ணம்மா வீட்டுக்கு செல்கின்றனர். இப்படிப்பட்ட திருப்பங்கள் நிறைந்த எபிசோடுகளுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

விஜய் டிவியின் டாப் சீரியல்களின் நேர மாற்றம் அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!

இனி, கண்ணம்மா லட்சுமியிடம் உண்மையை சொல்ல வேண்டியது மட்டும் தான் பாக்கி. இது தொடர்பான எபிசோடு எப்போது வெளியாகும் என்பதை எதிர்பார்த்து ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு குடும்ப புகைப்படம் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, ஹேமா, லட்சுமி, வேணு ஆகியோருடன் வெண்பாவும் இந்த புகைப்படத்தில் இடம்பிடிக்க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ரீல் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!