கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி, சந்தோச மிகுதியில் வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி, சந்தோச மிகுதியில் வெண்பா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி, சந்தோச மிகுதியில் வெண்பா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் பாரதி, சந்தோச மிகுதியில் வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த திருப்பமாக பாரதி கண்ணம்மாவிடம் நேரடியாக டிவோர்ஸ் கேட்கவுள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

தமிழ் சீரியல்களில் தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது ‘பாரதி கண்ணம்மா’. பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் காதலிக்கின்றனர். இருவரது குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்தில் சந்தோசமாக வாழும் தம்பதியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் பாரதியை ஒரு தலையாக காதலிக்கும் அவரது தோழி வெண்பா. இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் ஐஸ்வர்யா – கண்ணனுக்கு சப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

8 வருடங்களாக பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. ஒரு குழந்தை பாரதியிடமும், மற்றோர் குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கிறது. தற்போது இந்த சீரியலில் பாரதி தான் தனக்கு பிரசவம் பார்த்தது என்பதனை கண்ணம்மா தெரிந்து கொள்கிறார். தனது இரண்டாவது குழந்தையை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதியிடம் உதவி கேட்கிறார். ஆனால், தான் பிரசவம் பார்த்த போது ஒரு குழந்தை மட்டுமே பிறந்ததாக பாரதி கூறுகிறார். இதனை கண்ணம்மா நம்ப மறுக்கிறார்.

சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கான பின்னணி – நடிகர் குடும்பத்தின் கட்டுப்பாடுகள் காரணமா?

இனி அடுத்த கட்டமாக சீரியலில் பாரதி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் கண்ணம்மா அந்த இரண்டாவது குழந்தைக்கும் தன்னை அப்பா என்று கூறி விடுவார் என்று நினைத்து வெண்பாவை திருமணம் செய்ய நினைக்கிறார். அதனால் கண்ணம்மாவிற்கு டிவோர்ஸ் கொடுக்க நினைக்கிறார். இதனை கேட்டு மகிழும் வெண்பா கண்ணம்மாவிற்கு போன் செய்து பாரதிக்கு டிவோர்ஸ் கொடுக்க சொல்லுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here