‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் வினுஷா – TRP இல் தொடரும் நம்பர் 1! ரசிகர்கள் குஷி!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் ரோஷினிக்கு பதில் வினுஷா - TRP இல் தொடரும் நம்பர் 1! ரசிகர்கள் குஷி!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் ரோஷினிக்கு பதில் வினுஷா - TRP இல் தொடரும் நம்பர் 1! ரசிகர்கள் குஷி!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் வினுஷா – TRP இல் தொடரும் நம்பர் 1! ரசிகர்கள் குஷி!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் முன்னணி சீரியல்களை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து இரண்டு வாரங்களாக முதலிடத்தில் இருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல முன்னணி சீரியல்களுடன் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டில் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் மற்ற தொலைக்காட்சி சீரியல்கள் பிடித்தது. இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி மாற்றப்பட்டதால் TRP சரிவு ஏற்படும் என பதட்டத்தில் ரசிகர்கள் இருந்தனர்.

முகத்தில் காயத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஏற்கனவே ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் இருந்து ஹீரோ கார்த்திக் ராஜ் விலகிய பின் முதலிடத்தில் இருந்த சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டது. அதே போன்ற நிலைமை பாரதி கண்ணம்மா சீரியலுக்கு வர கூடாது என்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. கதையில் அனைவரும் எதிர்பார்த்தது போல பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் பாரதி கண்ணம்மாவிடம் காதல் காட்சிகளை அதிகப்படுத்தி கதை கொண்டு செல்லப்படுகிறது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த நடிகர் அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

அதனால் தற்போது 2 வாரங்களாக TRPயில் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் இருக்கிறது. முன்னதாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி சீரியலில் 600 எபிசோடுகளை கடந்து நடித்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி முதல் அவர் காட்சிகள் கடைசியாக ஒளிபரப்பானது. அதன் பின் களமிறங்கிய வினுஷா தேவி தன்னுடைய நடிப்பு திறமையால் சீரியலை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார், அதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!