குக் வித் கோமாளியில் வரும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் ரியாக்ஷன்!

0
குக் வித் கோமாளியில் வரும் 'பாரதி கண்ணம்மா' ரோஷினி - கலாய்க்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் ரியாக்ஷன்!
குக் வித் கோமாளியில் வரும் 'பாரதி கண்ணம்மா' ரோஷினி - கலாய்க்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் ரியாக்ஷன்!
குக் வித் கோமாளியில் வரும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்! இயக்குனர் ரியாக்ஷன்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இதனை கலாய்த்து வலைதளங்களில் வெளியான மீம் ஒன்றுக்கு இயக்குனர் பிரவீன் பென்னட் ரியாக்ட் செய்துள்ள வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி

தமிழ் சின்னத்திரையில் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மீண்டுமாக புத்தம் புதிய பொலிவுடன் துவங்க இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி வரும் 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இப்போது இந்த நிகழ்ச்சி குறித்ததான ப்ரோமோக்கள் சில வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. மேலும் இந்த புதிய சீசனில் போட்டியாளராக நடிகர் மனோபாலா, வித்யூலேகா, கிரேஸ் கருணாஸ், அந்தோணி தாஸ், நடிகை அம்மு அபிராமி, நடிகர் தர்ஷன், சந்தோஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் மற்றொரு முக்கிய நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் குக் ஆக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி கலந்து கொள்ள இருக்கிறார். விஜய் டிவியின் மாஸ்டர் படைப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் கிடைத்த வரவேற்புகளை அடுத்து தற்போது சினிமாவில் நடிப்பதற்காக சென்றிருக்கிறார். இதனால் சீரியலில் இவரை மிஸ் செய்து வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ரோஷினி.

இதற்கிடையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கண்ணம்மா ரோஷினியின் என்ட்ரியை கண்ட ரசிகர்கள் சில மீம்களை உருவாக்கி அவற்றை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். அதில் பல்வேறு ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கக்கூடிய ஒரு மீம் என்றால், ‘டாக்டர்’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘இப்படியே சொல்லி எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா’ என்ற வசனத்தில் ரோஷினி இடம்பிடித்துள்ள மீம் தான்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பாரதி – அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சமையல் அம்மா என்று சொல்லி ‘எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா’ என்று ரோஷினி, இயக்குனர் பிரவீனை பார்த்து கேட்பது போல அந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த மீமிற்கு ரியாக்ட் செய்துள்ள ‘பாரதி கண்ணம்மா’ இயக்குனர் பிரவீன் பென்னட், என்னமா இப்படி பன்றீங்களேமா என்ற பாடலை கேப்ஷனாக பதிவிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!