‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பாரதி – அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பாரதி - அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பாரதி - அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த பாரதி – அடுத்த ட்விஸ்டு! வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ள பாரதி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களுக்கு மத்தியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு முக்கிய சீரியலாக இருந்து வருவது ‘பாரதி கண்ணம்மா’ தான். விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் முக்கிய பிரபலங்கள் பலரும் சீரியலுக்கு புதிய முகங்கள் என்றாலும் சீரியலுக்கு பலம் என்பது அதன் கதைக்களம் தான்.

பிரபல சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் “சுந்தரி” – ரசிகர்கள் வாழ்த்து!

இப்படி ரசிகர்களின் ஒவ்வொரு எதிர்பார்ப்பையும் அழகாக பூர்த்தி செய்து வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது சில முக்கியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 10 ஆண்டுகள் கழித்து கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக்கொண்ட பாரதி அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். தொடர்ந்து பாரதி, கண்ணம்மாவின் திருமண நாளை கொண்டாடுவதற்காக சௌந்தர்யா வீட்டுக்கு இருவரும் ஜோடியாக வந்துள்ளனர்.

கண்ணம்மாவை மனதார மீண்டும் ஏற்றுக் கொள்ளும் பாரதி, ஆனாலும் ஒரு ட்விஸ்ட் – ‘பாரதி கண்ணம்மா’ கவுண்ட் டவுன்!

இது தொடர்பான காட்சிகள் சில டுவிஸ்டுடன் அடுத்தடுத்த எபிசோடுகளில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சீரியல் குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்துள்ள பாரதி ஷூட்டிங் ஸ்பாட்டை உற்சாகமாக கொண்டாடி வருகிறார். அதாவது நடிகர் அருண் பிரசாத் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சுகேஷ், வேணு, ஹேமா ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட படப்பிடிப்பு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!