‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

0
'பாரதி கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
'பாரதி கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியனுக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்றிருக்கும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது மணப்பெண் அலங்காரத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ரோஷினி

மக்களின் பேராதரவுடன் சுமார் 700 எபிசோடுகளை எட்டி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில முக்கியமான திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்றிருப்பவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். சாதாரண பக்கத்து வீட்டு பெண் போல தோற்றமளிக்கும் நடிகை ரோஷினி, சினிமா உலகம் எதிர்பார்க்கும் நிறத்தை பெறவில்லை என்பதால் சீரியலில் நடிக்க துவங்கிய ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்திருக்கிறார்.

“தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோகம் – சிறப்பு விருந்தினராக “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நட்சத்திரங்கள்!

என்றாலும் தனது லட்சியத்தின் மேல் கொண்ட நம்பிக்கையால் விடா முயற்சியுடன் போராடி வந்த இவருக்கு தமிழ் சின்னத்திரை உலகம் தனது ஆதரவை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவிலும் ஒரு நடிகையாக தடம் பதிக்க இருக்கிறார் நடிகை ரோஷினி. இதற்கிடையில் சினிமா வாய்ப்புக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய நடிகை ரோஷினி மீண்டும் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா “பாரதி கண்ணம்மா” சீரியல் கிளைமேக்ஸ் – ரசிகர்கள் குழப்பம்!

இப்படி இருக்க நடிகை ரோஷினி ஹரிப்ரியன், மணப்பெண் அலங்காரத்தில் ஒப்பனை செய்து கொண்டு எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களுக்கான மேக்கிங் வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் பட்டு சேலையில் திருமண கோலத்தில் தோன்றும் நடிகை ரோஷினி மிக அழகாக நடனமாடி இருக்கும் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வர, மறுபக்கத்தில் நடிகை ரோஷினிக்கு திருமணம் ஆகப்போகிறதா என்று கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!